Hero; ஏற்கனவே கதை திருட்டு: இதுல நஷ்டம் வேறயா? ஹீரோவுக்கு வந்த சிக்கல்! சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கிய நிலையில் உண்மை என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
ஹீரோ கதை திருட்டு சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் திருட்டுக் கதை விவகாரம் காலம் காலமாக நடந்து வருகிறது. இதில், பிரபல இயக்குநர்கள் முதல் அறிமுக இயக்குநர்கள் வரை பலரும் சிக்கித் தவிக்கின்றனர்.
அந்த வகையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கியது.
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று அட்லியிடம் உதவியாளராக இருந்த போஸ்கோ பிரபு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
அதன் பின்னர் கதை திருட்டு என்று நிரூபனமானது. எனினும், மித்ரன் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதனை சட்டரீதியாக சந்திக்கும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கேயும், போஸ்கோ பிரபுவின் கதைதான் ஹீரோ என்று நிரூபிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தினால், ரூ.33 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சன் டிவி மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றில் ஹீரோ படத்தை ஒளிபரப்பகூடாது என்று தடை விதிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் சன் டிவியில் ஹீரோ படம் வெளியிடுவதாக இருந்தது. அமேசன் பிரைம் லிஸ்டிலும் ஹீரோ படம் இருந்துள்ளது.
அந்த லிஸ்டில் இருந்து ஹீரோ படத்தையும் தூக்கி விட்டார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு தான் பல பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் மூலம் மொத்தம் ரூ. 33 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றிற்கு பெறப்பட்ட பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தயாரிப்பு நிறுவனமான கேஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.