Home சினிமா கோலிவுட் Doctor First Single: சிவகார்த்திகேயனின் டாக்டர் செல்லம்மா சிங்கிள் டிராக் எப்போது?

Doctor First Single: சிவகார்த்திகேயனின் டாக்டர் செல்லம்மா சிங்கிள் டிராக் எப்போது?

364
0
Chellamma Single Track

Doctor Chellamma Lyric Video; சிவகார்த்திகேயனின் டாக்டர் செல்லம்மா சிங்கிள் டிராக் எப்போது? டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் செல்லம்மா லிரிக் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லம்மா சிங்கிள் டிராக் லிரிக் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சில படங்களிலேயே புதிய உச்சம் தொட்டவர்.

கடைசியாக இவரது நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. தற்போது, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பிரியங்கா அருள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மேலும், யோகி பாபு, வினய், அர்ச்சனா ஆகியோரும் நடித்து வருகின்றனர். பிகில் மற்றும் ஜடா ஆகிய படங்களில் கால்பந்து வீரராக நடித்த யோகி பாபு இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார்.

அவர் கிரிக்கெட் உடையில் கையில் பேட் உடன் இருக்கும் புகைப்படம் அண்மையில், வெளியானது. இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இன்று டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எத்தனை மணிக்கு வரும் என்று அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இது குறித்து முக்கியமான தகவல் வந்துள்ளது. அதன் படி, டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் டிராக் செல்லம்மா லிரிக் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். மேலும், இந்த பாடல் குறித்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மூவருமே மாஸ்க் அணிந்துள்ளனர். மேலும், அவர்களுக்கு நடுவில் இருக்கும் டேபிளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.

டிக் டாக்கில் மில்லியன், பில்லியன் அளவிற்கு வேற லெவலில் ஹிட்டாக வேண்டும். டிக் டாக்கை திறந்தால் நம்ம பாட்டு தான் இருக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார்.

இதற்கு பதிலளிக்கும் அனிருத், அதற்கு டிக் டாக் இருக்க வேண்டும் என்கிறார். டிக் டாக்கை தடை செய்து விட்டார்கள்.

டிக் டாக் தடை நீக்கிய பிறகு ஒரு நல்ல ஐடியா யோசித்து சொல்லலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து அனிருத் செல்கிறார்.

டிக் டாக் தடையை வைத்தே ஒரு பாடல் சொல்லுங்க என்று சிவகார்த்திகேயன் கேட்கிறார். அப்படியே அந்த வீடியோ முடிகிறது.

ஆனால், வீடியோவின் பின்னணியில்

டிக் டாக் எல்லாம் பேன் அம்மா,

நேரா டூயட் பாட வாயேம்மா..

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தது எல்லாம் போதுமா…

கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசுமா…

செல்லம்மா

என்று அந்த பாடல் பாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleஆடி மாத தரிசனம் 1: ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தரிசனம்! ஆயிரங்காளியின் அற்புதங்கள்!
Next articleசம்பளத்தைக் குறைத்துக் கொண்ட தல அஜித்: போனி கபூருக்கு மெயில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here