Sivakarthikeyan; லேட்டா கொடுத்தாலும் ரூ.25 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா பாதிப்புக்காக ரூ.25 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் (#கொரோனாசிவகார்த்திகேயன்நிதியுதவி) அளித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதி மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிரிக்கெட் வீரர்கள், தெலுங்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் தங்களால் முடிந்தளவிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் இளவரசர் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது பங்களிப்பாக ரூ.25 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.
ஆனால், முதல்வர் அறித்து பல நாட்கள் ஆன நிலையில், தற்போது அவர் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தங்களது சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், அரிசி, நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இதற்கு உடனடியாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.