Home சினிமா கோலிவுட் சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி ரெட்டி பர்த்டே டுடே!

சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி ரெட்டி பர்த்டே டுடே!

0
373
Swathi Reddy

Swathi Reddy Birthday; சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி ரெட்டி பர்த்டே டுடே! ஜெய், சசிகுமார் நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகை சுவாதி ரெட்டி இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை சுவாதி ரெட்டி பிறந்தநாள் இன்று.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ரஷியாவில் பிறந்தவர் நடிகை சுவாதி ரெட்டி.

அவரது இயற்பெயர் ஸ்வெட்லானா. ஆரம்பத்தில் மும்பைக்கு வந்த சுவாதியினர் குடும்பத்தினர் அதன் பிறகு விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

படித்தது எல்லாமே விசாகப்பட்டினம். தனது 17 ஆவது வயதில் கலர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை 150 எபிசோடுகள் வரை தொகுத்து வழங்கியுள்ளார். முதல் வருட கல்லூரி வாழ்க்கையை முடித்த போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

டேஞ்சர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சுவாதிக்கு தமிழில் சுப்ரமணியபுரம் நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.

இப்படத்தில் கண்ணாலேயே காதல் செய்தார். அதுவும், கண்கள் இரண்டால் வரும் பாடல் இன்றும் ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யாக்கை, திரி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள சுவாதி ரெட்டி பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். ஒருசில பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி மலையாள பைலட்டான விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இந்த நிலையில், இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here