Home சினிமா கோலிவுட் தமிழ் சினிமாவை விட்டு வெளியேறும் விக்ரம்

தமிழ் சினிமாவை விட்டு வெளியேறும் விக்ரம்

514
0

தன் மகனின் சினிமா வாழ்க்கையை குறித்து கவனம் செலுத்த உள்ளதால் நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் இருந்து வெளி பெற போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உடம்பை வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் சிலர். அதில் நடிகர் விக்ரம் முதலில் வருவார்.

அவர் நடித்த சேது, காசி, பிதாமகன், ஐ, தெய்வத்திருமகன் போன்ற படங்கள் இதற்கு சாட்சி.

நடிகர் விக்ரம் இந்த வளர்ச்சிக்கு அவ்வளவு எளிதாக வரவில்லை. இவரது ஆரம்ப காலங்களில் நிறைய தோல்விகளை சந்தித்தார். சேது படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

தன் உடலை வருத்திக்கொண்டு நடித்தாலும் கதை தேர்வு செய்வதில் தற்போது சொதப்பி வருகிறார். இவர் ஒரு மிகப் பெரிய வெற்றியை கொடுக்க நீண்டகாலமாக போராடி வருகிறார்.

தற்போது விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் 20 வேடங்களில் வருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கில் 7 வேடங்களில் நடிகர் விக்ரம் தோன்றி இருந்தார்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு வேடங்கள் கொடுத்தாலும் தன் உடம்பை வருத்திக் கொண்டு, அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பவர் நடிகர் விக்ரம்.

இவரின் நடிப்பால் இவருக்கு தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது போன்ற விருதுகள் கிடைத்துள்ளது.

இவருக்கு விஜய், அஜித் போல் தனித்தனியாக ரசிகர்கள் இல்லை. தமிழ்நாட்டில் விக்ரமை பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்களை கையை விட்டு கூட எண்ணிவிடலாம் இவருக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

 

இவரை செல்லமாக தமிழ் ரசிகர்கள் சீயான் விக்ரம் என்று தான் அழைப்பார்கள். சீயான் என்பது சேது படத்தில் வரும் விக்ரமின் கதாபாத்திரம்.

தற்போது நடிகர் விக்ரம் குறித்து செய்திகள் கசிந்துள்ளது விக்ரமின் மகன் துருவ் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற படத்தில் நடித்தார். படம் தயாரிப்பாளருக்கும் மற்றும் நடிகர் விக்ரமுக்கும் திருப்திகரமாக இல்லாததால் வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்ற படத்தை எடுத்தார்கள். படம் மக்களிடம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

நடிகர் விக்ரம் இனி தனது மகன் துருவ் விக்ரமின் திரை வாழ்க்கை எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்த செய்தி குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது

நடிகர் விக்ரம் கோப்ரா படம் மட்டுமில்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இந்த படம் படப்பிடிப்பு தாமதமாகவே நடந்து வருகிறது.

  • தற்போது போன வைரஸ் காரணமாக அனைத்துவித படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது
Previous article10/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next article10 கோடி நிதி அளித்த சன்ரைசர்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here