Home சினிமா கோலிவுட் சாதனை படைத்த மாஸ்டர்: ஹலோவில் 1 பில்லியன் வியூஸ்!

சாதனை படைத்த மாஸ்டர்: ஹலோவில் 1 பில்லியன் வியூஸ்!

330
0
Master Thalapathy Vijay

Thalapathy Vijay; சாதனை படைத்த மாஸ்டர்: ஹலோவில் 1 பில்லியன் வியூஸ்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், மாஸ்டர் ஆல்பம் ஹலோவில் ஒரு பில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஆல்பம் ஹலோவில் ஒரு பில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியாகவில்லை.

ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என்று செய்தி வெளியானது.

அதோடு, மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் பட ஆல்பம் ஹலோவில் சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்து பாடல்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து, படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படம் ஹலோவில் ஒரு பில்லியன் வியூஸ் பெற்று கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, Master1BillionOnHelo என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here