Home சினிமா கோலிவுட் மாஸ்டர் படம் பார்க்க உடனே இந்த ஆப் டவுன்லோட் பண்ணுங்க

மாஸ்டர் படம் பார்க்க உடனே இந்த ஆப் டவுன்லோட் பண்ணுங்க

590
0

Master Digital Rights; மாஸ்டர் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்! விஜய்யின் மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ இன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Watch Master Movie Online

மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை (Master Digital Rights) அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஸ்ரீமன், சாந்தணு, ஆண்ட்ரியா, நாசர், அர்ஜூன் தாஸ் என்று நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கல்வி முறையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல்.

கடந்த 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டன. அதோடு படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.

கொரோனா லாக்டவுன் காரணமாக நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 22 ஆம் தேதி மாஸ்டர் படம்  வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அன்று விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இது விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கும் டபுள் கொண்டாட்டம் தான்.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ இன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதுவும், அதிகப்படியான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக பிகில் மற்றும் தெறி ஆகிய இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளையும் அமேசான் பிரைம் வீடியோ இன் நிறுவனமே கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Master Amazon Prime Video In

SOURCER SIVAKUMAR
Previous articleலெனின் பிறந்தநாள்: ஊரடங்கை மீறி ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மரியாதை
Next article2ஆவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய அமலா பால்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here