Ghilli: சன் டிவிக்கு நன்றி சொன்ன விஜய் ரசிகர்கள்: அப்படியே அடுத்தவாரம் திருப்பாச்சி? சன் தொலைக்காட்சியில் நேற்று மாலை 6.30 மணிக்கு கில்லி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தவாரம் திருப்பாச்சி, அடுத்து மாஸ்டர் என்று தங்களது கோரிக்கையை இப்போதே முன் வைத்துள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் நேற்று மாலை 6.30 மணிக்கு கில்லி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சிக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய், பிரகாஷ் ராஜ், த்ரிஷா நடிப்பில் கபடி மற்றும் காதல் கதையை மையப்படுத்தி கடந்த 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் கில்லி.
மதுரை கோட்டைக்கே ராஜாவாக இருக்கும் முத்துப்பாண்டி என்ற பிரகாஷ் ராஜ் த்ரிஷா மீது ஆசை கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.
இதில் விருப்பமில்லாத த்ரிஷா வீட்டைவிட்டு ஓடி வருகிறார். அவரை விஜய் காப்பாற்றி தனது வீட்டிலேயே தங்க வைக்கிறார். அவர் மீது ஆசை கொள்கிறார்.
இறுதியில் அவருடன் சேர்ந்தாரா? தனது கபடி கனவில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் கதை.
200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் கொடுத்த படம். விஜய்யின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படமாகவும் கில்லி அமைந்தது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவருமே சமூக வலைதளம், தொலைக்காட்சி, சமையல், உடற்பயிற்சி, யோகா, ஓவியம் என்று பிஸியாக இருக்கின்றனர்.
அவர்களுக்காகவே சன் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று மாலை 6.30 மணிக்கு கில்லி படத்தை ஒளிபரப்பு செய்துள்ளது.
இதன் காரணமாக # GhilliSunTV என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து, சன் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்து திருப்பாச்சி, மாஸ்டர் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மாஸ்டர் படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இப்போதே அதனை சன் டிவியில் ஒளிபரப்புங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர். அந்தளவிற்கு மாஸ்டர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கில்லி படத்தைப் போன்று விஜய் சூப்பர் சேனலில் துப்பாக்கி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.