Vanitha You Tube Channel: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில், வெறும் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் ரசிகர்கள் அவரது சேனலை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.
வனிதா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
விஜயகுமாரின் மகள் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அதோடு இல்லாமல், அந்த சேனலில் வரும் கலக்கப்போவது யாரு 9 நிகழ்ச்சிக்கு நடுவராகவும் வந்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது வனிதா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கான பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வந்தார். மேலும், ரசிகர்களுடன் நேரலையில் வந்து சேனலுக்கு புரோமோஷனும் தேடிக்கொண்டார்.
யூடியூப் சேனல் தொடங்கி இதுவரை 3 வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் ரசிகர்கள் அவரது சேனலை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.
நேற்று அறிமுகம் செய்து வைத்த அந்த சேனலுக்கு தற்போது வரை 16 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் வந்துள்ளனர்.
யூடியூப் சேனல் மூலம் சமையலுக்கு தேவையான டிப்ஸ், விதவிதமான உணவு வகைகள் போன்றவற்றை கற்றுக்கொடுக்க இருக்கிறார்.
இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றிகள் மனமார்ந்த நன்றிகள்…. லவ் யூ தம்பிஸ் மற்றும் தங்கச்சீஸ். சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் மற்றும் மற்றவர்களுடன் பகிருங்கள். லவ் யூ ஆல் என பதிவிட்டிருந்தார்.