VJ Ramya Divorce கல்யாணமான 10 ஆவது நாளில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றது ஏன்? விஜே ரம்யா விளக்கம்! திருமணமாகி 10 நாட்களில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றது ஏன் என்று நடிகை விஜெ ரம்யா விளக்கம் கொடுத்துள்ளார்.
கணவரை பிரிந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை நடிகை விஜே ரம்யா தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் நடிகை விஜே ரம்யா. பிஎஸ்சி விஸூவல் கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், பத்திரிக்கை மற்றும் மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் மேற்படிப்பு படித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நமம் வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ல்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அபர்ஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், திருமணம் நடந்து 10 ஆவது நாளிலேயே பிரிந்துவிட்டார்.
திருமணத்திற்குப் பிறகு ரம்யா நடிக்க வந்ததே அவரது பிரிவுக்கு காரணமாக கூறப்பட்டது. அதிலும் ஓ காதல் கண்மணி திரைப்படம் முக்கிய காரணமாக அப்போது பேசப்பட்டது.
கிட்டத்தட்ட 6 வருடங்கள் இது குறித்து விளக்கம் கொடுக்காமல் இருந்த ரம்யா தற்போது விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார்.
எங்கள் இருவருக்குமே வீட்டில் பார்த்து வைத்து தான் திருமணம் செய்து வைத்தார்கள்.
திருமணத்திற்கு பிறகு தான் எங்கள் இருவருக்கும் ஒத்துவராது என்று தெரிந்தது. ஆகையால், ஒருமனதாக பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.
ஒரே ஆண்டில் அதாவது 2014 ஆம் ஆண்டு தான் எனக்கு திருமணமும், விவாகரத்தும் நடந்தது. அப்படியிருக்கும் போது ஓ காதல் கண்மணி படம் தான் எங்களது பிரிவுக்கு காரணமாக கூறப்படுவது உண்மையில்லை.
ஏனென்றால், ஓ காதல் கண்மணி படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது 2015 ஆம் ஆண்டு. இந்தப் படம் ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது.
எங்களது இருவருக்கும் ஒத்து வரவில்லை. ஆகையால் ஒருமனதாக பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.
பிகில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே ரம்யா, விஜய்யின் அடுத்த படத்திலேயே அவருடன் இணைந்து நடித்துள்ளார். ஆம், மாஸ்டர் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.
அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியின் போது ரம்யா தான் பிகில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
இந்த நிகழ்ச்சியில் கீழே அமர்ந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.