Home சினிமா கோலிவுட் முதல் முதலாக வாத்தி ரெய்டு: என்ன நடந்தது? அனிருத் உற்சாக டுவீட்!

முதல் முதலாக வாத்தி ரெய்டு: என்ன நடந்தது? அனிருத் உற்சாக டுவீட்!

288
0
Vijay and Anirudh

Vaathi Raid Song Making; முதல் முதலாக வாத்தி ரெய்டு: என்ன நடந்தது? அனிருத் உற்சாக டுவீட்! விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி ரெய்டு பாடலை உருவாக்கும் போது என்ன நடந்தது என்பது குறித்து இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வாத்தி ரெய்டு பாடல் உருவாக்கும் போது என்ன நடந்தது என்பது குறித்து அனிருத் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ஆண்ட்ரியா, நாசர், சஞ்சீவ், சாந்தனு, பிரேம் ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி ரெய்டு பாடலை உருவாக்கும் போது ஸ்டூடியோவில் என்ன நடந்தது என்பது குறித்து அனிருத் வீடியோ வெளியிட்டு காட்டியுள்ளார்.

அதன்படி, தோராயமாக காலை 6.45 மணி. வாத்தி ரெய்டு பாடலை முதல் முதலாக ஸ்டூடியோவில் வைத்து கேட்ட போது எங்களது ரியாக்‌ஷன் இப்படித்தான் இருந்தது என்று அந்த வீடியோ மூலம் காண்பித்துள்ளார்.

மாஸ்டர் திரைக்கு வரும் போது இதை விட அதிகளவிலான ரியாக்‌ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleசியானின் துருவ நட்சத்திரம் என்னாச்சு? கௌதம் மேனன் வெளியிட்ட புதிய அப்டேட்!
Next articleசின்னத்திரை நடிகை தற்கொலை: தலைமறைவான காதலன் கைது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here