KGF 2 Release Date: யாஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க சுரங்கம் என்ன ஆனது என்பற்கு விடை கிடைக்கும் நாள்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் (KGF) படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் யாஷ். கன்னடத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிறக்கும் போது ஏழையாக பிறந்து, சாகும் போது பணக்காரனாகத்தான் சாகணும் என்று அம்மா சத்தியம் வாங்குகிறார்.
தன் அம்மாவின் சத்தியத்திற்காக பணக்காரனாக துடிக்கும் சிறுவன் ராக்கி கேங்க்ஸ்டராக மாறுகிறார். தங்கச்சுரங்கத்தை ஆட்டிப்படைக்கும் வில்லனை கொல்வதற்காக துணிச்சலோடு அவரது இடத்திற்கே செல்கிறார்.
அங்கிருக்கும் ஏழை கொத்தடிமை மக்களைக் கண்டு உணர்ச்சிவசப்படுகிறார். இறுதியில், வில்லனை கொன்று குவிக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படி இயக்கியிருந்தார் இயக்குநர்.
அந்தளவிற்கு படத்தின் காட்சிகள் கட்சிதமாக இருந்தது. ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமெண்ட் என்று எந்த இடத்திலும் குறையில்லாத படமாக கேஜிஎஃப் உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2-ஆம் (KGF 2 Release Date) பாகமும் உருவாகியுள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப் 2 (KGF 2 Release Date) படத்தில் யாஷிற்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும், யாஷிற்கு ஜோடியாக ரவீனா டாண்டன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் 2 படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படம் இப்போது வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.