Yogi Babu Marriage Reception; கொரோனா வைரஸ்: முதல்வரை சந்தித்து பேசிய யோகி பாபு! கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியில் உலகமே இருக்கும் நிலையில், யோகி பாபு அசால்ட்டாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காமெடி நடிகர் யோகி பாபு தைரியமாக சந்தித்து பேசியுள்ளார்.
யோகி பாபு திடீரென்று திருமணம் செய்து கொண்டார். கவுண்டமனி, செந்தில், சந்தானம், சூரி, ரோபோ சங்கர் ஆகியோரது வரிசையில் இடம்பெற்றவர் காமெடி நடிகர் யோகி பாபு.
தமிழ் சினிமாவில் இவர் இல்லை என்றால் படங்கள் இல்லை என்றும் கூறும் அளவிற்கு ஏராளமான படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார்.
தற்போது இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்று பொலம்பும் அளவிற்கு ரொம்பவே பிஸியாக இருக்கிறாராம்.
இந்த நிலையில், கடந்த மாதம் 5 ஆம் தேதி யோகி பாபு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
சென்னையின் திருத்தணி அருகிலுள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
யாரையும் அழைக்காமல் திடீரென்று யோகி பாபு திருமணம் செய்து கொண்டதால் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக தகவல் வந்தது.
ஆனால், தற்போது உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனினும், அதையும் மீறி, யோகி பாபு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் தயார் செய்து ஒவ்வொருவரது வீட்டிற்கும் சென்று கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், எப்போதும் பிஸியாகவே இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும், அவருக்கு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழை கொடுத்துள்ளார். வரும் 31 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், யோகி பாபு முதல்வரை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, கொரோனா குறித்து முதல்வரிடம் யோகி பாபு ரகசியமாக பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
யோகி பாபுவுடன் பாடகர் வேல்முருகனும் இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதற்கு முன்னதாக துணை முதல்வருக்கு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று, தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவரான விஜயகாந்தை சந்தித்துள்ளார்.
யோகி பாபு கட்சியில் இணைவதற்கு அங்கு சென்றாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்று கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இல்லை இல்லை அவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றுள்ளார் என்று தகவல் வந்துள்ளது.
யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விஜயகாந்தை சந்தித்து தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றுள்ளார்.
அப்போது, விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் மற்றும் இயக்குநர் முத்துக்குகுமார் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.