Metro Shirish Sharavanan; காவல் துறையினருக்கு உதவிய செய்த மெட்ரோ சிரிஷ்! சென்னை காவல்துறையினருக்கு குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு மாஸ்க்க மெட்ரோ பட நடிகர் சிரிஷ் வழங்கியுள்ளார்.
சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கு மெட்ரோ நடிகர் சிரிஷ் குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு மாஸ்க் ஆகியவற்றை வழங்கி தன்னால் முடிந்த உதவியை நம்மை பாதுகாக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு உதவியுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சிங்கப்பூர், இத்தாலி, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், டோக்கியோ என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் என்று கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் கொரொனா வைரஸ் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்புக்கு மருந்து இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
எனினும், நோய் பரவாமல் தடுப்பதும், அதிலிருந்து விலகியிருப்பதும் நம் ஒவ்வொருவரது கடமை என்று அரசும், மருத்துவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மெட்ரோ பட நடிகர் சிரிஷ் ஒருபடி மேல் சென்று நம்மை பாதுகாக்கும் பொருட்டு தங்களது குடும்பத்தையும் விட்டுவிட்டு நமக்காக போராடும் காவல் அதிகாரிகளை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு மாஸ்க் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.