Rajinikanth; ரஜினிகாந்த் வீட்டு முன்பு திருநங்கைகள் கொரோனா நிவாரண நிதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா நிவாரண நிதி கேட்டு ரஜினிகாந்த் வீட்டு முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கொளுந்துவிட்டது எரிகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் 273 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, அஜித், யோகி பாபு, சூரி, சூர்யா, ராகவா லாரன்ஸ் என்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 8 திருநங்கைகள் தங்களுக்கு கொரோனா நிதியுதவி அளிக்க வேண்டும் என்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்த ரஜினிகாந்த் வெளிவராததால், அவர் வரும் வரை இங்கிருந்து நகரமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, லதா ரஜினிகாந்த் தனது வீட்டு காவலாளி மூலம் திருநங்கைகளுக்கு தலா ரூ.5000 கொடுத்து உதவியுள்ளார்.
பணம் பெற்றுக் கொண்ட பிறகு திருநங்கைகள், நோய் நொடியின்றி வாழ வேண்டும், மென் மேலும் வளர வேண்டும் என்று கூறியதோடு ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதற்கு முன்னதாக சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth Gave rs 5000 each to transgenders for corona relief fund