Home சினிமா கோலிவுட் அஜித் மங்காத்தா படத்தில் ஏன் கைவிலங்கு டாலர் அணிந்திருந்தார் தெரியுமா?

அஜித் மங்காத்தா படத்தில் ஏன் கைவிலங்கு டாலர் அணிந்திருந்தார் தெரியுமா?

378
0
Thala Mankatha Movie

Mankatha; மங்காத்தா படத்தில் அஜித் கைவிலங்கு வடிவிலான டாலர் ஒன்றை கழுத்தில் அணிந்திருந்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

அஜித் மங்காத்தா படத்தில் கைவிலங்கு வடிவிலான டாலர் அணிருந்திருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி அமரன், வைபவ், ஆண்ட்ரியா, அஞ்சலி, மகத் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா.

விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் மும்பையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அசிஸ்டன்ட் கமிஷனர்.

என்னதான் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருந்தாலும், கோடிக்கணக்கான பணத்தை வில்லன் கும்பலிடமிருந்து கொள்ளையடிப்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

அதற்கு சரியாக ஸ்கெட்ச் போட்டு, பிளான் பண்ணி பணத்தை ஆட்டையபோட்டா, அவரை ஏமாற்றி பிரேம்ஜி பணத்தை கொண்டு செல்வார்.

இறுதியில் பணம், அஜித்துக்கு சென்றதா, இல்லை போலிசுக்கா, இல்லை வில்லன்களிடமே சென்றதா என்பதுதான் படத்தின் கதை.

அஜித்தை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டிய இந்தப் படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

இந்த நிலையில், அஜித் மங்காத்தா படத்தில் ஏன் கைவிலங்கு வடிவிலான டாலரை அணிந்திருந்தார் என்பதற்கான காரணம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து மங்காத்தா படத்தின் வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் கூறுகையில், பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு டானாக நடித்திருந்த அஜித் முதலில் பணத்தைப் போறு இருக்கும் டாலர் போன்ற ஒன்றை அவரது கழுத்தில் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், படத்தின் கிளைமேக்ஸில் பணம் தீயில் எரிவது போன்று காட்சி வருவதால், அஜித் டாலர் போன்ற ஒன்றை தான் அணிய வேண்டும் என்று வெங்கட் பிரபு கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு அஜித் மறுப்பு தெரிவிக்கவே, தான் ஒரு போலீஸ் என்பதால், கைவிலங்கு வடிவில் இருக்கும் டாலரை கழுத்தில் அணிந்து கொள்ள முடிவு செய்தார்.

இதற்கு இயக்குநர் தரப்பும் ஓகே சொல்லவே படம் முழுவதும் அஜித் கைவிலங்கு வடிவிலான டாலர் ஒன்றை கழுத்தில் அணிந்திருந்தார் என்று வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20 முதல் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.130 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்கிறது விக்கிப்பீடியா தகவல்.

நேற்று டுவிட்டரில் #Mankatha ஹேஷ்டேக் உருவாக்கி தல ரசிகர்கள் கொண்டாடினர். ஏன் என்று பார்த்தால், கேடிவியில் பிற்பகல் 1 மணிக்கு மங்காத்தா படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எத்தனையோ முறை யூடியூப்பிலும், டவுன்லோடு செய்தும் படத்தை பார்த்திருந்தாலும், தற்போது கொரோனாவால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், கேடிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது கொண்டாட்டமான விஷயம்தானே. அதான் தல ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleஅரசுக்கு உதவிய அஜித்: 3 லட்சம் ஸ்கொயர் மீட்டர், 900 லிட்டர் மருந்து தெளித்த தக்‌ஷா ட்ரோன்!
Next articleCorona : எந்த ராசிக்காரர்களுக்கு கொரோனா பரவாது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here