Home சினிமா கோலிவுட் புட்ட பொம்மா பாடலுக்கு கலக்கல் டான்ஸ் ஆடிய சிம்ரன்: வைரலாகும் வீடியோ!

புட்ட பொம்மா பாடலுக்கு கலக்கல் டான்ஸ் ஆடிய சிம்ரன்: வைரலாகும் வீடியோ!

539
0
Simran Butta Bomma

Simran Butta Bomma Tik Tok Video; புட்ட பொம்மா பாடலுக்கு கலக்கால் டான்ஸ் ஆடிய சிம்ரன்: வைரலாகும் வீடியோ! மிகவும் பிரபலமான புட்ட பொம்மா பாடலுக்கு சிம்ரன் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்ரன் புட்ட பொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். 1990 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் நடிக்க ஆரம்பித்தவர்.

அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

எல்லா நடிகைகளைப் போன்று திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அப்புறம் என்ன, ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை, தற்போது சினிமா வாய்ப்பில்லாமல், மேடைகளில் நடனம் ஆடும் நிலை ஏற்பட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.

ஆனால், வீட்டிலேயே இருப்பதால் ரசிகர்கள் யாரும் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து தங்களது அன்றாட வேலைகளை வீடியோ, புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அதோடு, டிக்டாக்கிலும் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை சிம்ரன், தெலுங்கு பாடலான புட்ட பொம்மா என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி டிக் டாக் செய்துள்ள வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக்கில் டிரெண்டிங்கிற்கு ஏற்ப பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். பிரபலங்கள் வெளியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலுக்கு உண்மையில் படத்தில் நடனம் ஆடிய பூஜா ஹெக்டேவை விட டான்ஸ்க்கு பேர் போன சிம்ரன் நன்றாக டான்ஸ் ஆடியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleடிசம்பரில் ராணா டகுபதி திருமணம்: மகிழ்ச்சி கடலில் மொத்த குடும்பம்!
Next articleவிஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார்? என்பதை புரிந்து கொண்டேன்: சாந்தனு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here