Home சினிமா கோலிவுட் குண்டாவில் சமையல் செய்த சூர்யா: வைரலாகும் புகைப்படம்!

குண்டாவில் சமையல் செய்த சூர்யா: வைரலாகும் புகைப்படம்!

331
0
Suriya Cooking Picture

Suriya Cooking Picture; குண்டாவில் சமையல் செய்த சூர்யா: வைரலாகும் புகைப்படம்! டேக்சா போன்று இருக்கும் சிறிய குண்டாவில் சமையல் செய்த சூர்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமையல் செய்த சூர்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா. எப்போதும் பிஸியாகவே இருந்து வந்தார். தற்போது கொரோனா வந்து அனைவரையும் சும்மாவே இருக்க வைத்துவிட்டது.

ஆம், சினிமா பிரபலங்கள், அப்பாவி ஜனங்கள், அரசியல் பிரபலங்கள் என்று அனைவரும் வீட்டிலே முடங்கியிருந்தனர். தற்போது தமிழகத்தில் மட்டும் வரும் 30 ஆம் தேதி வரையில் 5 ஆம் கட்ட லாக்டவுன் அம்லபடுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.

சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீட்டில் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்த சூர்யா சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், சிறிய அளவிலான டேக்சா போன்று இருக்கும் குண்டாவில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று லாக்டவுன் காரணமாக வெளியாகவில்லை. ஆனால், சூர்யா தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

இதே போன்று சூரரைப் போற்று படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படம் லாக்டவுன் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleபெண் இயக்குநர் கவலைக்கிடம்: கொரோனா வைரஸா?
Next articleபிரியங்கா சோப்ராவின் கணவர் கை கடிகாரத்தின் விலை ரூ.7.5 கோடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here