Home சினிமா கோலிவுட் ஒரே ஒரு தலைவன் அதுவும் தளபதி விஜய்: பிரபல இயக்குநர் ஓபன் டாக்!

ஒரே ஒரு தலைவன் அதுவும் தளபதி விஜய்: பிரபல இயக்குநர் ஓபன் டாக்!

477
0
Thalapathy Vijay

Thalapathy Vijay; ஒரே ஒரு தலைவன் அதுவும் தளபதி விஜய்: பிரபல இயக்குநர் ஓபன் டாக்! என்னுடைய ஒரே ஒரு தலைவன் தளபதி விஜய் என்று பிரபல இயக்குநர் அஜய் ஞானமுத்து ரசிகர்களிடம் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்சநட்சத்திரங்களில் நடிகர் விஜய் ஒருவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்களிலும் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவருக்குமே இவரை பிடிக்கும்.

டான்ஸ் ஆடுவதில் கில்லாடி. சிலருக்கு விஜய்யின் டான்ஸ் ரொம்ப பிடிக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி ஒருவர் தான் விஜய்யைப் பற்றி ரசிகர்களிடம் வேறு மாதிரி சொல்லியிருக்கிறார்.

அவர் யார்? என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இங்கு பார்ப்போம். உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர்களில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் ஒருவர்.

இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த 7ஆம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிமாண்டி காலனி என்ற ஹாரர் மற்றும் த்ரில்லர் படத்தின் மூலம் சினிமாவில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து கொண்டார்.

டிமாண்டி காலனி படத்தைத் தொடர்ந்து நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோரது நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் படத்தை கொடுத்தார்.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. தற்போது சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக யாருமே வீட்டை விட்டு வெளியில் வர முடியாதபடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளமே கதி என்று இருக்கும் பிரபலங்களில் ஒருவராக இருக்கும் அஜய் ஞானமுத்து ரசிகர்களிடையே உரையாடியுள்ளார்.

அப்போது, நீங்கள்தான் துப்பாக்கி படத்தின் உதவி இயக்குநர் என்று எங்களுக்கு தெரியும். ஆகையால், விஜய் பற்றி சில வார்த்தைகள் கூறுங்கள் என்று ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு, என்னுடைய ஒரே ஒரு தலைவன். சிலரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது ரொம்பவும் கடினமான ஒன்று என்று பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போது ஒரே ஒரு தலைவன் என்ற வார்த்தை டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இசை வெளியீட்டு விழா முடிந்து மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் ரிலீஸ் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் அறிவித்தபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாஸ்டர் படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஅரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட கோமாளி பட நடிகை!
Next articleஇளவரசன் பிறந்த சந்தோஷத்தில் ஜோக்கர் இயக்குநர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here