Akshara Gowda; நான் எவ்வளவு பெரிய ஆளுனு தெரியுமா? துப்பாக்கி பட நடிகை! துப்பாக்கி படத்தில் நடித்த நடிகை அக்ஷரா கவுடா நான் யாருன்னு தெரியுமா என்று கேள்வி எழுப்பி தனது கிளாமர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை அக்ஷரா கவுடான் தான் யாருன்னு தெரியுமா என்று கேள்வி எழுப்பி தனது கிளாமர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த படம் துப்பாக்கி. கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த துப்பாக்கி படத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், அக்ஷரா கவுடா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
துப்பாக்கி படத்தின் ஒரு காட்சியில் விஜய்க்கு, அக்ஷரா கவுடாவை பெண் பார்க்கும் படலம் நடக்கும். இதற்கு ஜெயராம் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் தலைமை தாங்குவர்.
இந்த காட்சியில், ஜெயராம் மற்றும் காஜல் அகர்வால் இவரும் காதலர்களாகவும் இருந்து விஜய்க்கு பெண் பார்ப்பார்கள். அப்படி அவர்கள் பார்த்த பெண் தான் அக்ஷரா கவுடா. படத்தில் ஸ்வேதாவாக வருவார். அதுவும், பாலியல் காட்சியில் நடித்துள்ள பெண் என்று நடிகை காஜல் அகர்வால் விஜய்யிடம் கூறுவார்.
எதுவாக இருந்தாலும் தனக்கு ஓகே என்று விஜய் கூறுவது போன்று அந்த காட்சி.
இந்த காட்சியில் வந்து சென்ற நடிகை அக்ஷ்ரா கவுடாதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், நான் அதிர்ஷ்டசாலி இல்லை. நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? நான் ஸ்மார்ட், நான் திறமையானவள், என்னை தேடி வரும் வாய்ப்புகளை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.