Home சினிமா கோலிவுட் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் இணைந்த விஜய் சேதுபதி!

தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் இணைந்த விஜய் சேதுபதி!

326
0
Vijay Sethupathi thalaivan irukkindran

Vijay Sethupathi; தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் இணைந்த விஜய் சேதுபதி! தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கமல் ஹாசன் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் ஓ மை கடவுள் படத்தைத் தொடர்ந்து, தற்போது, கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, லால் சிங் சதா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஹீரோ, வில்லன், குணச்சித்திர ரோல் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது நடந்த விபத்து, கொரோனா லாக்டவுன் ஆகிய காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து, தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் ஹாசன் நடிக்க இருக்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்புன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு உயர்வு – இளைஞர்கள் கடும் அதிருப்தி
Next articleசென்னையை ஆக்கிரமித்த கொரோன வைரஸ் – இயல்பு நிலை திரும்புமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here