Home சினிமா கோலிவுட் தமன்னாவுக்காக ஓம் தமன்னாய நமஹ என்ற மந்திரம் ஓதும் யோகி பாபு!

தமன்னாவுக்காக ஓம் தமன்னாய நமஹ என்ற மந்திரம் ஓதும் யோகி பாபு!

429
0
Yogi Babu Marriage

தமன்னாவுக்காக ஓம் தமன்னாய நமஹ என்ற மந்திரம் ஓதும் யோகி பாபு! காமெடி நடிகர் யோகி பாபு தமன்னாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக செய்தி வெளியாகி வருகிறது.

தமன்னாவை திருமணம் செய்து கொள்ள நடிகர் யோகி பாபு ஆசைப்படுவதாக செய்தி வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் நடிகர் யோகி பாபுவும் ஒருவராக இருக்கிறார். ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் யோகி பாபு.

நயன்தாராவை உருகி உருகி காதலிக்கும் யோகி பாபுவின் காதல் காட்சிகளும், பாடல்களும் ரசிகர்களை வியக்க வைத்தது.

இந்த காதல் பார்முலாவும், யோகி பாபு நடிக்கும் பேய் மாமா படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குநர் சக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், யோகி பாபு பிரபல ஹீரோயின்களை காதலிப்பது போன்று பேய் மாமா படத்தில் நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா, சமந்தா ஆகியோரை ஒரு தலையாக காதலிப்பது போன்றும், தோல்வி அடைவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

மேலும், காதல் தோல்வியால், யோகி பாபுவின் காதல் தமன்னா பக்கம் திரும்புவது போன்றும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

திருட்டு தொழில் செய்து வரும் யோகி பாபுவுக்கு, அதன் மூலம் ரூ.100 கோடி வருமானம் ஈட்ட திட்டம் போடுகிறார்.

தமன்னாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஓம் தமன்னாய நமஹ என்று ஆயிரம் முறை மந்திரங்களை ஓதுவும் போன்றும், படுக்கையறை முழுவதும் தமன்னாவின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here