Home நிகழ்வுகள் தமிழகம் கொரோனா வைரஸ் பீதி: தங்கம் விலை கிடுகிடு உயர்வு

கொரோனா வைரஸ் பீதி: தங்கம் விலை கிடுகிடு உயர்வு

757
0
கொரோனா வைரஸ் பீதி தங்கம் விலை கொரோனா வைரஸுக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

கொரோனா வைரஸ் பீதி: இதனால் தங்கம் விலை கிடுகிடு உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸுக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

கொரோனா வைரஸ் பீதி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

சீனாவைப் போன்று அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நிகழ்ந்தால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும்.

ஏற்கனவே சீனாவில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

கொரோனா வைரஸுக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் வீதியில் நடமாட மாட்டார்கள். இதனால் பெட்டிக்கடை முதல் பொட்டிக் கடைகள் வரை வியாபாரம் பாதிக்கப்படும்.

எனவே, தொழிலதிபர்கள் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யமாட்டார்கள். அந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.

கொரோனா மட்டுமல்ல வேறு எந்த ஒரு பிரச்சனையால் தொழில் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக தங்கம் விலை உயரும்.

இதற்கு காரணம் தங்கத்தை அதிகளவில் மக்கள் வாங்குவதால் தான். மீண்டும் இயல்பு நிலை திரும்பியவுடன் தங்கத்தை விற்று தொழிலில் முதலீடு செய்வார்கள்.

நேற்றைய தங்கம் விலை

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் …………….. 4,128

1 பவுன் தங்கம் …………….. 33,024

1 கிராம் வெள்ளி …………… 50.00

1 கிலோ வெள்ளி ………….. 50,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் …………………. 4,025

1 பவுன் தங்கம் ………………… 32,200

1 கிராம் வெள்ளி ……………… 48.50

1 கிலோ வெள்ளி …………….. 48,500

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here