Home அரசியல் 2021 சட்டமன்ற தேர்தல் ஓர் அலசல்; வெற்றி யாருக்கு?

2021 சட்டமன்ற தேர்தல் ஓர் அலசல்; வெற்றி யாருக்கு?

1033
0
2021 சட்டமன்ற தேர்தல் ஓர் அலசல்; வெற்றி யாருக்கு?

2021 சட்டமன்ற தேர்தல் ஓர் அலசல்; வெற்றி யாருக்கு? தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதைபற்றிய ஒரு பறவைப் பார்வை.

2021 சட்டமன்ற தேர்தல்

2021-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் நம் மாநில கட்சிகள் மற்றும் புதுக் கட்சிகளின் நிலை என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 125 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சர் ஆனார்.

நமக்கு நாமே

2011 தேர்தலில் பெரும் தோல்வி அடைந்த திமுக கூட்டணி இந்த தேர்தலில் 108 இடங்களைப் பிடித்தது. இதற்கு முக்கிய காரணமே ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் நமக்கு நாமே என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டதே.

மாற்றம் முன்னேற்றம்

இதுபோக மாற்றம் முன்னேற்றம் மேற்கொண்ட பாமக, அன்புமணி ராமதாஸ் அவர்களால் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை.

ஆகையால் 2019 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது.

ஆனால் அதில் அதிமுக கூட்டணி தேனியில் மட்டுமே வெற்றி அடைந்தது. 40 தொகுதியில் 39 இடங்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி தோல்வி அடைந்தது.

ஜெயலலிதா மறைவு, எடப்பாடியார் உதயம்

2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

அப்போது தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். சசிகலா தரப்பில் அழுத்தம் வர 2017 பிப்ரவரி 15-ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

பிறகு மெரினா கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தது தனிக்கதை (சிலிர்த்து சில்லரை தூக்கி எறிந்த தருணம்).

பன்னீர்செல்வத்தின் அதிமுக

சசிகலா முதல்வர் ஆகிறார் என்று அறிவிப்பு வந்தது. கூடவே ஜெயில் தண்டனையும் வந்தது. அவசர அவசரமாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா.

பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தார் தன்னுடன் கூடவே பதினெட்டு எம்எல்ஏகளையும் அழைத்தும் வந்தார்.

மீண்டும் இணைந்த ஓபிஎஸ் – இபிஎஸ்

சசிகலாவை வெளியில் எடுக்க எடப்பாடி அரசு முயற்சி செய்யவில்லை, அதற்கு பதில் அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கனார்கள். காரணம் ஓபிஎஸ் ஆவார்.

துணை முதல்வர் பதவி கோரிக்கையும் வைத்தார். எடப்பாடியும் சம்மதம் தெரிவித்து ஓபிஎஸ் அவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டார்.

அதிர்ச்சி தந்த டிடிவி

ஆர்கே நகர் இடைத்தேர்தல் வந்தது அதிமுகவா? திமுகவா? என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது இடையில் புகுந்து சிக்ஸர் அடித்தார் டிடிவி தினகரன்.

ஆர்கே நகரில் வெற்றி பெற்று அதிமுக, திமுகவை மட்டுமில்லாமல் தமிழக மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தார் டிடிவி.

அரசியலில் உலகநாயகன்

உலகநாயகன் கட்சி தொடங்கி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். அனைத்து தொகுதியிலும் திறமையான படித்த வேட்பாளர்களை நிறுத்தினார்.

சில இடங்களில் இரண்டாவது இடமும் பல இடங்களில் மூன்றாவது இடங்களை பிடித்தார். மக்கள் அவரை அங்கீகரித்து தேர்தலில் அப்பட்டமாக தெரிந்தது.

ஆதலால் 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுயுகத்தோடு களமிறங்குவார் என்பதில் சந்தேகமேயில்லை.

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி

2017 ஆண்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “அரசியலுக்கு வருவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

பாராளுமன்றம் நம் இலக்கு இல்லை தமிழக முதலமைச்சர் பதவி தான் நம் இலக்கு என்று 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற களத்தில் இறங்கிவில்லை.

ஆனால் கண்டிப்பாக சட்டமன்றத்தில் களமிறங்கி விடுவார். காரணம் சமீப காலமாகவே அவரின் அரசியல் பேச்சுக்கள் தான்.

இவரால் பெரிய மாற்றாம் ஆகாது என்று நகர்ந்து செல்ல முடியாது. காரணம் ரஜினி என்னும் வார்த்தைக்கு இன்னும் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஓட்டு போடுவார்களா என்பது 2021-ஆம் ஆண்டு தான் தெரியவரும். ஆனால் ஆட்சி மாற்றத்தில் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்.

திமுகவின் கூட்டணி பலம்

திமுக செயல் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றத்தில் இருந்து நல்ல முன்னேற்றம் கொண்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களை வென்றது.

ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை விட அதிக இடங்களை கைப்பற்றியது. திமுகவிற்கு கூட்டணியும் கூடுதல் பலம். காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் இடையில் சிறிய மோதல் ஏற்பட்டாலும் பிறகு சுமூகமானது. விசிக பலமான கூட்டணியாக இருந்துவருகிறது.

பிரஷாந்த் கிஷோர் எண்ட்ரி

திமுக வெற்றிக்கு வியூகம் அமைக்க கார்ப்பரேட் எனும் ஐ-பேக் நிறுவனத்துடன் கைக்கோர்த்தது. அதன் தலைவர் பிரஷாந்த் கிஷோர் ஆவார்.

பிரதமர் மோடி, பீகார் நிதிஷ்குமார், ஆந்திரா மாநிலம் ஜெகன்மோகன் ரெட்டி போன்றவர்கள் வெற்றி பெற காரணமாக இருந்தவர்.

ஆனால் இவர் வெற்றி பெரும் அணி எது என தெரிந்து தான் கட்சிகளுடன் கைகோர்க்கிறார். தமிழகத்தில் இவரின் வியூகம் எடுப்படுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எதற்கும் அஞ்சாத இபிஎஸ்

அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் என்ற ஒற்றைச் சொல்லை வைத்து வெற்றிபெற்று வந்தார்.

2016-ஆம் ஆண்டு தனக்கென மக்கள் மனதில் இடம்பிடித்து அம்மா என்கிற வாரத்தையை அதிமுக தொண்டர்கள் மத்தியில் பதிய வைத்தார். வெற்றியும் பெற்றார்.

ஆனால் எடப்பாடி சில இடங்களில் தவறுகள் செய்தாலும் பெரும்பாலான இடங்களில் மக்கள் மனதில் கவனம் ஈர்த்துக் கொண்டே வருகிறார்.

பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை விட்டு விலகாமல் இருந்தால் அதிமுகவிற்கு கூடுதல் பலம்.

பிரிந்து கட்சி ஆரம்பித்து ஆரம்ப கட்டத்தில் வளர்ந்து வந்த டிடிவி அவர்களுக்கு முன்பு போல இப்போது பலம் இல்லாவிட்டாலும் அதிமுகவின் பல தொண்டர்கள் அங்கு இருக்கிறார்கள்.

அவரும் அதிமுகவுடன் இனைந்தால் திமுகவை சமாளிப்பது கடினமாக இருக்காது. சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவிற்கு செல்வாரா? இல்லை அமமுகவிற்கு செல்வாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆனால் இதற்கெல்லாம் ஆஞ்சாதவராக மாறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

கதை சொல்லும் சீமான்

இடையில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் போட்டியாக வரும் என சிலர் எண்ணினார்கள்.

ஆனால் அதன் தலைவர் சீமான் மக்களை மேடையில் கதை சொல்லி சிரிக்க வைப்பதிலும், தான் செல்லும் அனைத்து இடங்களில் செய்தியாளர் சந்திக்கும் போது ரஜினியை வைத்து அரசியல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருப்பதால் அதன் நிலைப்பாடு அறிய சில மாதங்கள் ஆகும். கூட்டணி தொடருமா இல்லை தனியாக தேர்தலை சந்திக்குமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

மொத்தத்தில் கண்டிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலைக் கணிப்பது கடினமே.

Previous articleமகளிர் உலகக்கோப்பை: கபாலியாக மாறிய ஷாபாலி
Next articleWWCT20I saw vs thaw: தொக்காக மாட்டிய தாய்லாந்து மகளிர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here