WWCT20I saw vs thaw: மகளிர் உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி. தென் ஆப்ரிக்காவிடம் தொக்காக மாட்டிய தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி.
WWCT20I SAw vs THAw
பிப்.27: 7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது
இன்று பிரிவு ‘பி’ யில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து மோதியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
லீ, சுனே லோஸ் அதிரடி
தொடக்க ஆட்டகாரர்களாக லீ மற்றும் நெய்க்ரேக் களமிறங்கினார்கள். நெய்க்ரேக் இரண்டு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய சுனே லோஸ், லீயுடன் ஜோடி சேர்ந்து தாய்லாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சை அடித்து நொறுக்கித் தள்ளினார்கள்.
இரண்டாவது விக்கெட்க்கு இந்த ஜோடி 80 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய லீ 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். லோஸ் 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தனர். தாய்லாந்து தரப்பில் 7 பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தினார்கள்.
ஆனால் பெரிதாக பலன் கிடைக்கவில்லை மூவர்கள் மட்டும் தலா ஒரு விக்கெட் விழ்த்தினார்கள்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
இமாலய இலக்கை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணியினர் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 82 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
ஆராவாரம் இல்லாமல் முடிந்தது இரண்டாவது இன்னிங்ஸ். இதன் மூலம் 113 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது தென் ஆப்பிர்க்கா.
தாய்லாந்து அணியில் அதிகபட்சமாக காம்சோம்ஃப் 26 ரன்கள் மற்றம் சுதிராவ்ங் 13 ரன்கள் சேர்த்தனர்.
மற்ற ஒன்பது வீராங்கனைகள் வெறும் ஒற்றை இலக்கு எண்களை மட்டும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தர்பபில் இஸ்மாயில் மற்றும் சுனே லோஸ் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடியாக ஆடி சதம் அடித்த லிஸ்லே லீ ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த உலககோப்பையில் தென் ஆப்பிரிக்கா பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.
முந்தைய ஆட்டத்தில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிர்க்கா பிரிவு பி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இடத்தில் உள்ளது.
தாய்லாந்துக்கு அடிமேல் அடி
இந்த உலகக்கோப்பையில் தாய்லாந்தை மற்ற அணிகள் ரன் ரேட்டை உயர்த்த பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எந்த ஒரு தோல்வி கவலையின்றி, வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், சர்வதேச அணி போன்று விளையாடாமல் கவுண்டி அணி போல் விளையாடுகிறார்கள்.
மேற்கு இந்திய தீவு அணியிடம் 78 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்
இங்கிலாந்திடம் ஏழு விக்கெட் இழப்புக்கு அதே 78 ரன்கள் சேர்த்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
இன்று கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து 82 ரன்களில் அனைத்து விக்கெட்டும் இழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளனர்.
தெ.ஆப்பிக்கா vs தாய்லாந்து அடுத்த போட்டி
தென் ஆப்பிர்க்கா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற மார்ச் 1-ஆம் தேதி சிட்னியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
வருகிற மார்ச் 3-ஆம் தேதி அதே சிட்னி மைதானத்தில் பாகிஸ்தானை தாய்லாந்து எதிர்கொள்கிறது. இதுவும் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.
உலகக்கோப்பை புள்ளி பட்டியல்
பிரிவு ஏ
TEAM P W L P
IND : 3 3 0 6
NZ : 2 1 1 2
AUS : 3 2 1 4
SL : 2 0 2 0
BAN : 2 0 2 0
பிரிவு பி
TEAM P W L P
RSA : 2 2 0 4
ENG : 2 1 1 4
PAK : 1 1 0 2
WI : 2 1 1 0
THAI : 3 0 3 0