பெரியார் சர்ச்சை பற்றி கூறிய ரஜினி உண்மையில் 1971-ல் வெளிவந்த துக்ளக் கட்டுரையைப் படித்தாரா? 2017-ல் வெளிவந்த அவுட்லுக் பத்திரிக்கையைப் படித்தாரா?
ரஜினி, பெரியார் பற்றி என்ன கூறினார்
1971 பெரியார் அவர்கள் சேலத்தில் ஸ்ரீராமார்-சீதை சிலையை அம்மணமாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்றார்.
இதை துக்ளக் இதழில் சோ வெளியிட்டார். அந்த இதழை அன்றைய திமுக அரசு வெளியாகவிடாமல் தடுத்தது.
இதனால் யாருக்கும் தெரியாமல் அந்த குறிப்பிட்ட இதழை சோ அவர்கள் கள்ளச்சந்தையில் (பிளாக்) விற்க ஏற்பாடு செய்தார். அதனால் ஒரு பத்திரிக்கை விலை 50 ரூபாய்க்கு மேல் விற்றது.
இதுவே ரஜினி துக்ளக் விழா மேடையில் கூறியது.
பெரியார் சர்ச்சை திகவினர் போர்க்கொடி
இந்த சர்ச்சை அன்றோடு முடிந்துவிடவில்லை. ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆதாரம் இல்லை என திகவினர் போர்க்கொடி தூக்கினர்.
அன்றைய ஊர்வலத்தில் பெரியார் மீதே செருப்பு மாலை வீசப்பட்டது. இதையே ரஜினி மாற்றிப்பேசுகிறார். இதில் உண்மை எதுவும் இல்லை என திகவினர் ரஜினி மீது குற்றம் சுமத்தினர்.
வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்யப்போவதாக வீரமணி தெரிவித்தார். இதற்கு தமிழக கட்சிகள் பல ஆதரவும் தெரிவித்தது.
பெரியார் சர்ச்சை மீண்டும் பிள்ளையார் சுழி
இதனையடுத்து ரஜினி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பெரியார் பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று கூறினார்.
மேலும் அவர், 2017 அன்று ஹிந்து குழுமத்தின் அவுட்லுக் பத்திரிக்கையில் கூட இதைப்பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது.
எனவே நான் படித்த, கேட்ட செய்திகளைப் பற்றியே கூறியுள்ளேன். இந்த விஷயத்தை மீண்டும் கிளறுவது நீங்கள் தான் (பத்திரிக்கையாளர்கள்). இது மறுக்க கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்கக்கூடிய சம்பவம் எனத் தெரிவித்தார்.
மறக்கக்கூடிய சம்பவத்தை துக்ளக் விழாவில் மீண்டும் கூறி அதை அனைவரும் அறிந்துகொள்ள ரஜினியே பிள்ளையார் சுழி போட்டு உள்ளார்.
ரஜினிக்கு படிக்கத் தெரியுமா?
ரஜினிக்கு இன்று படிக்கத் தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் அவருக்குப் பல ஆண்டுகளாக தமிழ் படிக்கத் தெரியாது.
இதை எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் நேரடியாகவே கண்டுள்ளனர். சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் கூட இதை ஓப்பனாக வலைப்பேச்சு யுட்யூப் பக்கத்தில் கூறியுள்ளார்.
மீண்டும் துக்ளக் பிரவேசம்
துக்ளக் இதழின் இன்றைய ஆசிரியர் குருமூர்த்தி 1971-ல் வெளிவந்த முழு பத்திரிக்கையை வெளியிடப்போவதில்லை.
ஆனால், அதில் இடம் பெற்ற சேலம் பற்றிய கட்டுரையை மீண்டும் வெளியிட உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினி கூறிய கருத்துக்கள் யாருக்கு நாட்டமோ இல்லையோ? குருமூர்த்திக்கு நல்ல லாபம். அவர் எதிர்பார்த்த விஷய்ம் நடந்துவிட்டது. துக்ளக் பத்திரிக்கை விற்பனை மீண்டும் சூடு பிடிக்கும் என்பது மட்டும் உறுதி.
தஞ்சையில் ஹைட்ரோ கார்பன்
பெரியார் சர்ச்சையில் ஹைட்ரோ கார்பன் பற்றிய செய்தி காணாமல்போய் விட்டது. மத்திய அரசு தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை எனக் கூறியது.
தஞ்சையில் எங்கு வேண்டுமானாலும் குழி தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
இந்தச் செய்தி அடியோடு காணாமல்போய் விட்டது. இதற்கு காரணமும் ரஜினியே. ரஜினி வேண்டும் என்றே பெரியார் சர்ச்சை பற்றி மீண்டும் பேட்டி கொடுத்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினியை இயக்குவது குருமூர்த்தியா?
இதேபோன்றே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர்.
பயங்கரவாதிகளை இப்படித்தான் அடிக்கவேண்டும் என போலீசாருக்கு ஆதரவாக ரஜினி பேட்டி கொடுத்தார். இதையும் அன்று குருமூர்த்தி சொல்லித்தான் சொன்னார் என செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.