காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram highway) சீனா – பாகிஸ்தான் நல்லுறவு நெடுஞ்சாலை. உலகின் மிக நீளமான சாலை. 1300 கிலோமீட்டர் தூரம் கொண்டது. மிகவும் ஆபத்தான சாலை.
காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram highway)
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பமாகிறது, குன்ஜேரப் கணவாய் வழியாக சென்று சீனாவை அடைகிறது.
இந்த நெடுஞ்சாலை சீனா எல்லையை சென்றவுடன் “சீனா தேசிய நெடுஞ்சாலை 314” ஆக மாறுகிறது.
உலகின் மிக நீளமான சாலை
உலகிலேயே மிக நீளமான தார்ச்சாலை கொண்ட நெடுஞ்சாலையாகும். அதனால் இது பல்வேறு நாட்டின் சுற்றுலா பயணிகளை கவர்கிறது.
இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தானின் குன்ஜேரப் பகுதியில் உள்ள மலைப் பகுதியை கடந்து செல்கிறது. அந்த மலைகள் கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 4714 மீட்டர் (15,466 அடி) உயரம் கொண்டது.
இவ்வளவு உயரத்தில் இந்த தார்ச்சாலை கட்டமைக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதியில் உள்ள மக்கள் இதை, எட்டாவது உலக அதிசயம் என்று கூறுவருகிறார்கள்.
ஆசிய கண்டத்தின் “ஆசிய நெடுஞ்சாலை 4” இதன் வழியாகவே செல்கிறது. 1959 ஆம் ஆண்டு இந்த நெடுஞ்சாலை பணி கள்கட்ட ஆரம்பித்து 1979 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டு பொது மக்களுக்காக திறக்கப்ட்டது. இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தான் மற்றும் சீனா இரு நாடுகளும் இணைந்து தங்களுடைய அரசாங்க பொருளதார பணத்தில், இந்த நெடுஞ்சாலை கட்டப்பட்டது.
இந்த நெடுஞ்சாலை பணிகள் கட்டி முடிப்பதற்குள் 810 பாகிஸ்தானியர்கள், 200 சீனர்களும் உயிர் இறந்துள்ளனர்.
இவர்கள் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் இறந்துள்ளனர்.
வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் சுற்றுலா பயணிகளை கவர கூடிய அளவிற்கு அதனுடைய வானிலை வசீகரமாக இருக்கும்.
ஆனால் கடும் பனி பொழிவு காரணத்தால் பனிக்காலத்தில் அரசாங்கத்தால் இந்த நெடுஞ்சாலை மூடப்படும்.
மழை காலங்களிலும் அதாவது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்.
குன்ஜேரப் கணவாய் பகுதியில், மே 1 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
2016-க்கு பிறகு பாகிஸ்தான் அரசாங்கம் வெளியூர் பயணிகளுக்கு பாதுகாப்பை அதிகரித்த காரணத்தால், 1.75 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram highway) இரண்டு நாட்டின் மிகப்பெரிய நான்கு நதிகள் மற்றும் இரண்டு ஏரிகளை கடந்து செல்கிறது.
இந்தூஸ் நதி, ஹன்ஸா நதி, கில்ஜித் நதி, குன்ஜேரப் நதி, அட்டபத் மற்றும் கரகுல் ஏரி ஆகும். காரக்ககோரம் நெடுஞ்சாலையில் நாமும் ஒரு நாள் பயணிக்க தோன்றுகிறது.