Home சிறப்பு கட்டுரை பிளாக் டெத் கொள்ளைநோய்: உலகின் முதல் குவாரண்டைன் தோன்றக் காரணம்!

பிளாக் டெத் கொள்ளைநோய்: உலகின் முதல் குவாரண்டைன் தோன்றக் காரணம்!

584
0
பிளாக் டெத் கொள்ளை நோய்

பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை அழித்த பிளாக் டெத் எனும் கொள்ளைநோய் எலியில் இருந்து மனிதர்களுக்கு தெள்ளுப்பூச்சியின் மூலம் பரவியது.

பிளாக் டெத் எப்போது தொடங்கியது?

1346-ஆம் ஆண்டு முதல் 1353-ஆம் ஆண்டு வரை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பரவிய இந்த கொள்ளை நோய், பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய ஆசியாவில் பரவி இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மிகத் தீவிரமாகப் பரவிய இந்த கொள்ளைநோய், ஐரோப்பிய கண்டத்தின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேரை கொன்றொழித்தது என நார்வேயை சார்ந்த வரலாற்றாசிரியர் ஜார்கண் பெனிடிக்டோ (Jørgen Benetictow) “The Black Death, 1346-1353: The Complete History” என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

பலகோடி மக்களைக் கொன்றொழித்ததால்தான் இந்நோய் பிளாக் டெத் என்று அழைக்கப்படுகிறது.

உலகின் முதல் குவாரண்டின் (Quarantine):

மேற்கு நாடுகளில் அவிசென்னா (Avicenna) என்று அறியப்படும் இஸ்லாமிய மருத்துவரான இப்னு சினா தான் முதன் முதலில் குவாரண்டின் என்னும் சொல்லை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இவர் பாரசீக நாட்டை (தற்போதைய ஈரான்) சார்ந்தவர். பதினோராம் நூற்றாண்டில் மருத்துவத் துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பை அளித்தவர்.

இவர் எழுதிய “தி கேனன் ஆப் மெடிசன் (The Canon Of Medicine)” எனும் புத்தகத்தில் பலநூறு நோய்களைப் பற்றி நோய்களைப் பற்றியும், அது பரவும் முறை மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளயும் விரிவாக எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தில் இவர் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகளால் பரவும் கொள்ளை நோயை நாம் ஒரு சில நாட்கள் நம்மை தனிமைப்படுத்திக் கொள்வதின் (QUARANTINE) மூலம் கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் பெரும்பகுதியை நாசம் செய்த கொள்ளை நோயும் இந்த முறையைப் பின்பற்றியே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து இருக்கும் இன்றைய உலகில், கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்னும் நுண்ணுயிரியை எந்த ஒரு மருந்தினாலும் இதுவரையில் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய மருத்துவரான இப்னு சினா கூறிய தனிமைப்படுத்துதல் முறை மூலமே உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன.

Previous articledhanushism: அனிருத் கொடுத்த ரணம்; தனுஷை மீட்டவர் யுவன் | Yuvan Special 2
Next articleதமிழ்நாட்டில் இன்று 669 புதிய கொரோனா நோயாளிகள் சென்னையில் மட்டும் 509 பேர் பாதிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here