Home வரலாறு அண்ணல் அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு

அண்ணல் அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு

890
1
அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு

அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு, பிறந்தநாள். அம்பேத்கார் பங்களிப்பு தீண்டாமைக்கு எதிராக, காந்தி பற்றிய அம்பேத்காரின்  குற்றச்சாட்டு, அம்பேத்காரின் பங்களிப்புகள்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை [பாபா சாகேப் – தந்தை] பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை இப்பதிவில் காண்போம்.

அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு

அம்பேத்கார் பிறந்தநாள்

மத்திய பிரதேசம் அம்போவதே கிராமத்தில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் ஆகியோருக்கு 14ஆம் குழந்தையாக பிறந்தார்.

இளமைப்பருவத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த காரணத்தினால் பல்வேறு துன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்துள்ளார்.

பள்ளியில் கல்வி கற்கும் பொழுது மேல்சமூகத்தினரிடம் பேசவே உடன் அமர்ந்த்து பயிலவோ தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் வடமொழி மற்றும் பிற மாணவருடன் விளையாடவும் இயலாது.

பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவரது குடும்பம் அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மேல்நிலை கல்வி முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

கல்லூரியிலும் சாதிகொடுமைகளை தாண்டி பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக ‘லெப்டினன்ட்’ பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார்.

பின்னர் பரோடா மன்னார் இவருக்கு கொலம்பியாவில் எம்.ஏ. முதுகலைப் பட்டம் பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

உயர்கல்வி பயில அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.

இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரை மட்டும் ‘இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ ஆகியவை எழுதி அங்கு முனைவர் பட்டம் பெற்றார்.

ஜெய் பீம் வரலாறு – ஜெய் பீம் பெயர் வந்தது எப்படி?

அம்பேத்கார் தீண்டாமைக்கு எதிராக

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் என வலியுறுத்தினார். இதை காந்தி கடுமையாக எதிர்த்தார்.

இது சமூகத்தை இரண்டாக பிரிக்கும் என அஞ்சினார். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரத போராட்டம் செய்தார். இதனால் காந்தி கைது செய்யபட்டு புனே சிறையில் அடைக்கப்பட்டார்.

அம்பேத்கார் பிறந்த நாள்

காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும்.

இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதி அவர்கள் வாக்களிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

அம்பேத்காரின் காந்தியை பற்றிய குற்றச்சாட்டு

“காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப அவர் குணம் மாறும்.

ஆதரவும் மாறும், ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”.

காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான்.

ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

அம்பேத்கார் பங்களிப்புகள்

இந்தியாவின் சட்ட மேதை என்று அழைக்கப்படும் இவர் இந்தியா அரசியலமைப்பு சட்டத்தை எழுத பல்வேறு நாடுகள் சென்று அதை நடுநிலையாக எழுதினார்.

அம்பேத்காரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.

கில்டன் யங் ஆணையத்திடம் பொருளாதாரம் பற்றி நான்கு அறிந்து மூன்று புத்தகம் எழுதிய அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

பவுத்த சமூகத்தினரின் தீண்டாமையினால் சந்தித்த பல இன்னல்களை பார்த்த அம்பேத்கார் யார் சூத்திரர்கள் என்ற புத்தகத்தை எழுதினார். 1956-ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் என்ற புத்தகத்தை எழுதினார்.

அம்பேத்கார் தழுவிய புத்த மத வரலாறு

அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரப்பூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள்.

நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அம்பேத்கார் 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிரழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here