கல்பனா சாவ்லா பிறந்த நாள்: இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை
முதல் பெண்மணியாக விண்வெளிக்குச் சென்று இந்தியாவை பெருமைப்படுத்திய திருமதி கல்பனா சாவ்லா பிறந்த நாள் இன்று.
1962-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் பனார்சி லால் சாவ்லா, சான்யோகிதா தேவி தம்பதிகளுக்கு மகளாக பிறந்த இவர், சிறு வயதில் இருந்து விண்வெளி பொறியாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
தொடக்க கல்வி அரசுப் பள்ளியிலும் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் இளங்கலைப் பட்டமும் பெற்றார். பல்வேறும் தடைகளைத் தாண்டி மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார்.
ஜூன் பியாரி ஹாரிசன் என்ற அமெரிக்க விண்வெளிப் பயிற்சி ஆசிரியரைத் திருமணம் செய்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
கல்பனா விண்வெளி பற்றிய ஆய்வில் சிறப்பாக செயல்பட்டதால் 1994-ஆம் ஆண்டு நாசா தன்னுடைய ஆய்வு மையத்திற்கு தேர்வு செய்தது. மேலும் அங்கு பவர் லிப்ட் கம்புடேசனல் போன்ற கடினமான படிப்பை முடித்தார்.
இதன் மூலம் நாசாவின் 15 பேர் கொண்ட குழுவில் தேர்வு செய்யப்பட்டார். கொலம்பியா விண்வோடத்தில் 1996-ஆம் ஆண்டு முதல் முறை 6 வீரர்களில் ஒருவராக விண்வெளிக்குப் பயணம் செய்தார்.
இந்தியாவின் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவரையே சாரும். மேலும் ராகேஷ் வர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இந்தியர் ஆவார்.
ஜனவரி 16, 2003-ஆம் ஆண்டு கொலம்பியா விண்வோடத்திலிருந்து மீண்டும் பூமிக்குத் திரும்பினார்.
16 நாள் பயணம் முடித்து பிப்ரவரி 1-ம் தேதி பூமியில் தரை இறங்குவதற்கு சில நிடங்கள் முன் அவர் வந்த விண்வோடம் வானில் வெடித்துச் சிதறியது.
விண்வெளிக்காக தான் வாழ்வையே அர்ப்பணித்த இந்தியப் பெண்மணியின் பிறந்த நாள் இன்று. மார்ச் 17.