Home சிறப்பு கட்டுரை சாவித்திரிபாய் புலே; இந்திய பெண்ணியத்தின் தயார்

சாவித்திரிபாய் புலே; இந்திய பெண்ணியத்தின் தயார்

0
558

சாவித்திரிபாய் புலே; இந்திய பெண்ணியத்தின் தயார்

இந்தியாவில் முதலில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்காக போராடிய பெண்மணி சாவித்திரிபாய் புலே ஆவார். பாலின மற்றும் ஜாதிய அடிப்படையில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை எதிர்த்து போராடினார்.

சாவித்திரிபாய் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் பெண் கவிஞர் ஆவார். இந்தியாவின் முதல் ஆசிரியை என்று அழைக்கப்படுகிறார். மேலும் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்ததால் இந்திய பெண்ணியத்தின் தயார் என்று அழைக்கப்படுகிறார்.

சாவித்திரிபாய் புலே வாழக்கை வரலாறு

1831ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நைகன் என்னும் கிராமத்தில் பிறந்தார். தன்னுடைய 9 வயதில் ஜோதிராவ் புலேவை 1840இல் மணந்தார். இவர்கள் இருவரும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடினர்.

1848ஆம் ஆண்டு ஜாதி மற்றும் பாலின ரீதியா ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி பெற்று கொடுக்க முயற்சிகள் பல செய்து பெண்களுக்கென தனி பள்ளி அமைத்தார்.

இவர்களின் போராட்டம் பார்ப்பனர்களுக்கு எதிராக அமைந்தது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்க விடாமல் தடுத்ததே இந்த பார்ப்பனர்கள் தான்.

தலித் மக்களை படிக்க வைப்பதற்காக மேல் ஜாதி மக்களிடமிருந்து அதிக எதிர்ப்புகளும் தொந்தரவுகளும் சந்திக்க வேண்டியதாக அமைந்தது.

இத்தனை தடைகளையும் மீறி கணவன் மனைவி இருவரும் வாழ்நாளில் 18 பள்ளிகளுக்கு மேல் கட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி அளித்து வந்தார்.

விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார்.

1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

இதனால் தான் இந்தியாவின் முதல் ஆசிரியை என்றும் பெண்ணியத்தின் தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here