Home சிறப்பு கட்டுரை ராஜ ராஜ சோழன் சமாதி எது? தொடரும் மர்மம்!

ராஜ ராஜ சோழன் சமாதி எது? தொடரும் மர்மம்!

1162
1
ராஜ ராஜ சோழன் சமாதி

ராஜ ராஜ சோழன் சமாதி எது? தொடரும் சோழர்கள் மர்மம்! 1000 வருடங்கள் அழியா கோவில் கட்டிய அருள்மொழிவர்மன் கல்லறை, கைலாசநாதர் கோவில் பள்ளிப்படை?

அருள்மொழிவர்மன் கல்லறை பள்ளிப்படைஇந்தியா மட்டும் அல்ல உலக வரலாற்றில் தங்களுக்கென்று ஒரு தனிப் பெயரையும் புகழையும் நிலைநாட்டிச் சென்றவர்கள் சோழர்கள்.

இந்த சோழ சாம்ராஜ்யத்தின் மிகச்சிறந்த சோழ மன்னர்களில் ஒருவரான ராஜ ராஜ சோழன் என்ற அருள்மொழிவர்மன் இறப்பும் அவருடைய நினைவிடத்தில் இருக்கும் மர்மத்தையும் இக்கட்டுரையில் காண்போம்.

கி.பி 947-ஆம் ஆண்டு சுந்தர சோழனிற்கும் வானவன் மாகாதேவி அம்மையாருக்கும்  இரண்டாவது மகனாகப் பிறந்த இவர், கி.பி 985-ஆம் ஆண்டே ஆட்சிக்கு வந்தார்.

கி.பி 985 முதல் 1014 வரை வெறும் 30 ஆண்டுகள் இவர் புரிந்த ஆட்சியே சோழ சாம்ராஜியத்தின் பொற்காலம் என்று அனைவராலும் பேசப்படுகிறது.

ராஜ ராஜ சோழன் சமாதி மற்றும் இறப்பு

கைலாசநாதர் கோவில்தன்னுடைய புதல்வன் ராஜேந்திர சோழன் ஆட்சிக்குப் பின்னர் சிறிது காலம் மரணப் படுக்கையில் இருந்து கிபி 1014-ஆம் ஆண்டு தன்னுடைய 67-ஆம் வயதில் இயற்கை மரணம் அடைந்தார்.

இவருடைய சமாதி  கும்பகோணம் மாவட்டத்தில் உடையலூர் கிராமத்தில் ஒட்டத்தோப்பு எனும் இடத்தில் இருப்பதாக இணையத்தில் சில புகைப்படங்களும் பதிவுகளும் உள்ளன. அதனைச் சுற்றி வசிக்கும் மக்களால் அது நம்பப்பட்டு வருகிறது.

கட்டிட கலைஞரும் சோழ வரலாற்றைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்த பேராசிரியர் G. தெய்வநாயகம் அவர்கள்.

கைலாசநாதர் கோவில் தான் ராஜராஜ சோழன் அவர்களின் பள்ளிப்படையாக இருக்க முடியும் என்று சில கருத்துகளை முன் வைக்கிறார்.

அருள்மொழிவர்மன் பள்ளிப்படை மற்றும் அதன் வரலாறு 

தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்கி மக்கள் அனைவராலும் போற்றப்பட்டு பற்பல சாதனைகளை செய்து இறந்த மனிதர்களை கடவுளுக்கு நிகராக வைத்து வணங்குவதே பள்ளிப்படை.

அதாவது இறந்தவர்களின் அஸ்தியுடன் சேர்த்து சிவன்கோவிலை கட்டி அதன் பெயரை இறந்தவர்களின் பெயருக்கு இணையாக மாற்றி வைப்பதே இந்தப் பள்ளிப்படையின் சம்பிரதாயம் ஆகும்.

இந்த சம்பிரதாயம் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்டது. ராஜ ராஜ சோழன் அவருடைய கொள்ளுப்பாட்டனார் ஆதித்யா சோழர், ஸ்ரீ கலகஸ்டியில் (தற்போதைய ஆந்திர பிரதேசம்) இயற்கை மரணம் அடைந்தார்.

ஆதித்யா சோழா நினைவாக அவருக்கு ஸ்ரீ கலகஸ்டியில் ஆதித்யேஸ்வர எனும் பள்ளிப்படையைக் கட்டியுள்ளார்.

வேலூர் அருகே வேள்பாடி எனும் இடத்தில் அரிஞ்செய சோழர் அவர்களின் நினைவாக அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலையும் கட்டியுள்ளார் ராஜராஜ சோழன்.

சிவனின் புகழையும் அதைப் போதிக்கும் லக்கூலிசா பசுபதா எனும் பள்ளி கிபி 7-ஆம் நூற்றாண்டில் தோன்றி அதன் பிறகு தமிழ்நாட்டில் பரவியதாக நம்பப்படுகிறது.

ராஜராஜ சோழன் இறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் சிவபக்தியில் முழுத்தீவிரமாக இறங்கியதாக சான்றுகள் கூறுகின்றன.

பேராசிரியர் தெய்வநாயகத்தின் சான்றுகள் 

கிபி 1112-ஆம் ஆண்டு காஞ்சி கைலாசநாதர் கோவில் பாழடைந்து இடியும் நிலையில் இருக்கும் பொழுது ராஜராஜ சோழனின் கொல்லுபேரன் மன்னர் குலோத்துங்கச் சோழன் அதைப் புதுப்பித்துக் காட்டினார்.

இந்தக் கோவிலுக்கு எதிர்ப்புரத்தில் இருக்கும் பால்குலத்து அம்மன் கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் குலோத்துங்கச் சோழனின் 42-ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் புதுப்பித்ததாக பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜராஜ சோழர் சிவபடசேகரர் ஆக அவதாரம் எடுத்தாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது சிவனின் பாதத்தில் சேர்ந்து இதுவும் பள்ளிபடையாக உருப்பெட்டுள்ளதாக கூறுகின்றனர்.

கைலாசநாதர் கோவில் சாதாரண சிவன் கோவில் இல்லை என்பதை குறிப்பிட இன்னும் சில சான்றுகளும் அதனுள் அமைந்துள்ளன.

கோவிலின் ஆரம்பத்தில் இருக்கும் பெண் தெய்வமானது சமீபத்தில் அதாவது 200 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு வைக்கப்பட்டதாக தெரிகிறது.

கோவிலின் மையப்பகுதியில் அகோரிகள் சிவனை வழிபடுமாறு கல்வெட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். இது ராஜராஜனின் இறுதிக்கால வாழ்க்கையை குறிப்பிடுகிறது.

அதாவது கிபி 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் வாரணாசியில் நான்கு அகோரிகளை அழைத்துக்கொண்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.

கருவறையின் வெளிப்புறத்தில் நடனமாடும் சிவனும் அவரின் காலடியில் அகோரியும் இருக்குமாறு சிற்பம் ஒன்றுள்ளது. இது சிவபடசேகரர் எனும் அனுமானத்தை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

கைலாசநாதர் கோவிலில் அமைந்திருக்கும் விமான கட்டிட அமைப்பு இது பள்ளிப்படை என்பதை மேலும் உறுதி செய்கிறது. எனவே இது அருள்மொழிவர்மன் பள்ளிப்படை (கல்லறை) என அவர் குறிப்பிடுகிறார்.

Disclaimer

மேற்கூறிய அனைத்தும் நாங்கள் படித்த ஆராய்ந்த கட்டுரைகள், புத்தங்கள் மற்றும் காணொளிகளை வைத்தே எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 100 சதவிகிதம் உண்மை என்று எங்களால் கூற இயலாது.

Previous articleஜெய் பீம் 1881-ல் நடந்த உண்மை வரலாறு!
Next articleகிறிஸ்தவம்: கிறிஸ்தவ மத வரலாறு & பிரிவுகள்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here