பொங்கல், மகர சங்கராந்தி இரண்டிற்குமான தொடர்பு? மகர சங்கராந்தி வேறு பெயர்கள் லோஹ்ரி (Lohri), சுகாரத், பொகாலி பிகு (bogali bihu). காணும் பொங்கல்
தை மாதம் பிறப்பு
தை மாதம் சூரியனுக்கு வரவேற்பு நாளாகவும் தானிய அறுவடை காலமாகவும் திகழ்கின்றது.
இந்தியா மட்டுமில்லாமல் தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நோபாளம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் ஹிந்து மக்களால் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.
சங்கராந்தி வேறு பெயர்கள்
சீக்கிய மற்றும் வடஇந்திய மக்கள் ‘லோஹ்ரி’ (Lohri) என்றும், மத்திய இந்தியர்கள் ‘சுகாரத்‘ என்றும், அசாம் இந்துக்கள் ‘பொகாலி பிகு‘ (bogali bihu) என்றும் சங்கராந்தியை அழைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஹிந்துக்கள் மற்றும் பிற தெற்கு இந்திய மாநிலங்களில் பொங்கல் அல்லது சங்கராந்தி பொங்கல் என்று அழைக்கின்றனர்.
புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது.
இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது.
பெரும்பாலான இந்து பண்டிகைகள் சூரிய சந்திர கிரகணம் பொறுத்து, சந்திர நாட்காட்டியை வைத்தே முடிவு செய்யப்படுகின்றன.
எவ்வாறு மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது?
பண்டிகை நாளில் புதிய ஆடைகளுடன், வீட்டைச் சுற்றி வண்ண கோலங்கள், அலங்கரிப்பு என ஒரே வண்ணமயமாக தோற்றமளிக்கும்.
இப்பண்டிகையின்போது பெரும்பாலும் இனிப்பு உணவுப்பண்டங்களே தயாரிக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் எள்ளுருண்டை, பிற இனிப்பு உணவுகள் தயாரிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பால், வெல்லம் சேர்த்து செய்யும் பச்சரிசி பொங்கல், பனங்கிழங்கு மற்றும் கரும்பு வைத்து கடவுளை தரிசிக்கின்றனர்.
பொங்கல் – சங்கராந்தி தொடர்பு
மகர சங்கராந்தி என்பது முற்றிலும் சூரிய வழிபாட்டை மையப்படுத்திய பண்டிகை. பொங்கல் சூரிய வழிபாடு மட்டும் அல்ல.
அறுவடை, உழவு, மட்டுமன்றி இவற்றிக்கு காரணமான காளை வணங்கும் விதமாக மாட்டுப்பொங்கல் என தனி ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடுகின்றனர்.
காணும் பொங்கல்
மூன்றாம் நாள் காணும் பொங்கல். கன்னிப் பெண்கள் மணவாளானை காணும் நாள். பிற்காலத்தில் காணும் இயற்கையை ரசிக்கும் நாளாக மாறிப்போனது.
தை மாதத்தை வெகுவிமர்சையாக கொண்டாடி வரவேற்பது தமிழ் நாட்டில் மட்டுமே சிறப்பாக நடைபெற்று வருகிறது.