19/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷம் ராசிபலன்
மிகவும் தைரியமான நாளாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிலும் நெலிவு சுலிவு பார்த்து இருக்க வேண்டிய நாள். லாவகமாக வரும் எதிர்ப்புகளையெல்லாம் சமாளிக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5, அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை.
ரிஷபம் ராசிபலன்
மிகவும் சந்தோஷமான நாள். எதிர்பார்த்த அனைத்தும் கைகூடும் நாளாகக் காணப்படுகிறது. ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அதிர்ஷ்ட எண்: 6
மிதுன ராசிபலன்
கொஞ்சம் பரபரப்பாக இயங்கக் கூடிய நாள். வாந்தி மயக்கம் போன்றவை இருக்கும். ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதில் உடல்நலத்தில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட எண்: 9, அதிர்ஷ்ட நிறம்: மரகதம்.
கடக ராசிபலன்
மிகவும் மகிழ்ச்சியான நாள். எல்லாமே நலமாக வாய்க்கும். வெளிநாடு செல்வது, அங்கு வேலைவாய்ப்புகான முயற்சியில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 4
சிம்மம் ராசிபலன்
கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு சண்டை சச்சரவாக மாறலாம். அதனால் பொறுமை தேவை. திருமகளை வழிபடுவது நலம் பயக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: காக்கி, அதிர்ஷ்ட எண்: 5
கன்னி ராசிபலன்
செய்கின்ற வேலை, தொழிலில் வெற்றியைக் காட்டுகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
யாரிடமும் வீண் வாதங்கள் வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு நினைத்ததை வாங்கி மகிழ நல்ல காலம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, அதிர்ஷ்ட எண்: 7
துலாம் ராசிபலன்
பாக்யம் சிறக்கும் நாள். நல்ல அதிர்ஷ்டம் மேலாக இருந்து விரும்பிய அனைத்தும் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்களால் குடும்பம் சுபிட்சமடையும்.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3
விருச்சிக ராசிபலன்
குடும்பம் மேன்மையுறும். குருவின். நல்லருள் கிடைக்கப் பெறுவதால் பாதகம் ஏதுமில்லை. வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர்சிவப்பு, அதிர்ஷ்ட எண்: 9
தனுசு ராசிபலன்
வீட்டில் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டம் பன்மடங்கு பெறுகும். நினைத்தது எல்லாம் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பால் வெள்ளை, அதிர்ஷ்ட எண்: 6
மகரம் ராசிபலன்
இளைஞர்களுக்குப் பொன்னான நாள். வேலை வாய்ப்புகளில் நல்ல முன்னேற்றம் நிச்சயம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு நன்மையுண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மரகதம், எண்: 5
கும்ப ராசிபலன்
உங்கள் குழந்தைகள் நலம் கருதி, நன்றாக உழைப்பீர்கள். வியாபாரம் அமோக லாபம் பெறும். அனைத்திலும் நல்ல உழைப்பைச் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, அதிர்ஷ்ட எண்: 2
மீனம் ராசிபலன்
பெற்ற தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வண்டி வாகனங்களை பராமரிப்பில்லாமல் எடுத்துச் செல்லக் கூடாது. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, அதிர்ஷ்ட எண்: 1
19/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.