Home ஜோதிடம் 29/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

29/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

1152
0
29/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

29/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

லாபங்கள் பெருகக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. வியாபாரிகள் பழைய பகைமையை மறந்து அனைவருடனும் நட்பு பாராட்டினால் இரட்டிப்பு வெகுமானம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

அதிர்ஷ்டகரமான நாளாகக் காணப்படுகிறது. எந்த நேர்முகத் தேர்விலும் எளிதாக வெற்றி பெற்று நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாள். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசிபலன்

நல்ல நாளாகக் காணப்படுகிறது. எதிலும் முன்னேற்றம் உண்டு. ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும் நாள். எடுத்த காரியங்கள் வெற்றியடையும் சிறந்த நாளாக இந்த நாள் இருக்கிறது.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம் : மாணிக்க வண்ணம்

கடக ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. தைரியம் மிகுந்து வெற்றி வாய்ப்புக்களுக்காக உழைக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக அவசியம். காது சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

சிம்மம் ராசிபலன்

இன்று தீமைகளுக்கெதிராகப் பொங்கியெழும் நாளாகக் காணப்படுகிறது. எதிரிகள் பயப்படும்படி கோபம் கொள்ள நேரிடும். குடும்பப் பகைகளை மறந்து இணக்கமாகிக் கொள்வது பிரச்சினைகளைக் குறைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

கன்னி ராசிபலன் 

ராசியிலேயே சந்திரன் இருப்பதால், வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். நன்றாக உழைக்க வேண்டிய நாளாகக் காசப்படுகிறது. தங்கள் முகத்தை வெகுவாக அழகுபடுத்தி மகிழ்வீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

துலாம் ராசிபலன்

கொஞ்சம் விரையமான நாளாகக் காணப்படுகிறது. வேலைபார்க்கும் இடத்தில் பேசாமல் காரியமாற்றுவது அவசியம். தகுந்த வேலை மாற்றம் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. அம்மன் அருள் காக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ணம். அதிர்ஷ்ட எண் : 3

விருச்சிக ராசிபலன்

மிகவும் நல்ல நாளாகக் காணப்படுகிறது. அதிர்ஷ்டங்கள் கூடி வரும். சௌகரியமான நினைத்த வேலை இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. தங்கு தடையற்ற செல்வவளம் கிடைக்கும் நாள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இருக்கும் கஷ்டம் நிவர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

தனுசு ராசிபலன்

நல்லதொரு நாளாகக் காணப்படுகிறது. எந்த நேர்முகத் தேர்விலும் அசாத்தியமாக பதில் சொல்லி அசத்துவீர்கள். கவிதை கட்டுரை என்று உங்கள் புகழ் ஓங்கும். இன்பமான நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

மகரம் ராசிபலன் 

சாதுர்யமான நாளாகக் காணப்படுகிறது. எதிலும் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. திருமணப் பேச்சுகள் சுப முடிவை எட்டும். வெளிநாட்டு வேலை கிடைக்கக் கூடிய நாள். யோகமான நாளாக விளங்குகிறது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், எண் : 3

கும்ப ராசிபலன்

எட்டில் சந்திரன் இருப்பதால் நிதானம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். எதிலும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. அளந்து அறிவோடு அமைதியாகப் பேச வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

மீனம் ராசிபலன் 

மிகவும் சந்தோஷமான நாளாகக் காணப்படுகிறது. மனம் விரும்பியவரோடு குதூகலமாக இருக்கக் கூடிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி, நண்பர்களோடு அரட்டை என மிகவும் ஏகாந்தமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

29/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleகல்யாண வீடு கோபி மற்ற தொடர்களில் இருந்து வேறுபடுவது ஏன்?
Next articleCobra First Look Release: கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here