Home ஜோதிடம் இன்றைய ராசிபலன் 16/2/2020: தின ராசிபலன்கள்: – Horoscope Tamil

இன்றைய ராசிபலன் 16/2/2020: தின ராசிபலன்கள்: – Horoscope Tamil

717
0
இன்றைய ராசிபலன் 16/2/2020: தின ராசிபலன்கள்: - Horoscope Tamil தனுசு ராசிபலன்

இன்றைய ராசிபலன் 16/2/2020: தின ராசிபலன்கள்: – Horoscope Tamil. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

நல்ல நாளாகக் காணப்படுகிறது. நண்பர்களால் அனுகூலம் உண்டு. வம்பு வழக்குகளில் ஒதுங்கியே இருப்பது நல்லது. மற்றபடி அனைத்து காரியங்களும் கைகூடும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம்

ரிஷபம் ராசிபலன்

உங்களுடைய அதீத தைரியத்தால் எதனையும் வெல்லும் திறன் வாய்க்கும். உடல் நலக் கோளாறுகள் இருந்தால் இன்று ராகு கேதுகளை வழிபட நிவர்த்தியாகும். சகோதர உறவினர்களின் உடல் நலத்தைப் பேணுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண்: 4

மிதுன ராசிபலன்

குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இருந்தாலும் சிறு சிறு மனக்குழப்பம் அவ்வப்போது வந்து போகும்.

யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு கூடாது. ஏமாந்து போவீர்கள். நடுநிலையான மனதுடன் இருப்பது சிறந்தது.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம்.

கடக ராசிபலன்

மனக்குழப்பங்கள் வரலாம். எதிலும் நிதானம் தேவை. வயதானோர்களுக்கு வாந்தி, பித்தம், மயக்கம் வரலாம். தெய்வ நாம சங்கீர்த்தனம் செய்வது அவசியம். வேலைப்பளு மற்றும் பொறுப்புகள் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

சிம்மம் ராசிபலன்

விரையங்கள் தலைதூக்கும் நாள். சிறுவர்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். வீண்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள நேரலாம். கம்யூனிகேஷன், வக்கில், ஆசிரியர் தொழிலுடையோர் சிறப்புறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு; அதிர்ஷ்ட எண் : 9

கன்னி ராசிபலன் 

சொத்தைப் பல் ஏற்பட வாய்ப்புண்டு. முன்னோர்களுக்கான காரியங்களை சரியாகச் செய்யத் தூண்டும் நாள். வேலைப்பளு ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பால் வெள்ளை அதிர்ஷ்ட எண்: 6

துலாம் ராசிபலன்

நல்ல வேலை கிடைக்கும் நாள். முயற்சித்தால் முன்னுதாரணமான வேலையைப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் தன லாபம் உண்டு. நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மரகத வண்ணம். அதிர்ஷ்ட எண் : 5

விருச்சிக ராசிபலன்

மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. தந்தை வழி உறவுகளால் சந்தோஷம் கூடும். தூர தேசத்திலிருந்து நல்ல செய்தி வரும். நரம்பு எலும்பு சம்மந்தப்பட்ட் நோய்கள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண் : 2

தனுசு ராசிபலன்

சந்திரன் ராசியிலேயே உலவுவதால் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் நாளாகக் காணப்படுகிறது. எவரிடமும் கருத்துச் சொல்லாமல் இருப்பது நலம். பொறுமை காப்பது கூடுதல் நலம். திருமணப் பேச்சுகள் சுபமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண் : 1

மகரம் ராசிபலன் 

ராசியிலேயே சூரியன் இருப்பதால் எதிலும் விவாதம் கூடாது. தந்தை வழி உறவுகளிடம் பகை கூடாது. திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுப முடிவுகள் கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், எண் :

கும்ப ராசிபலன்

உடல் நலத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலும். வாழ்க்கை நிலைமை மேம்படும். உடனுக்குடனான கடனுதவி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு. எதிலும் லாபங்கள் பெருகி வரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

மீனம் ராசிபலன் 

பொருளாதார நிலை உயரும். கண் தொடர்பான பிரச்சனை வரலாம். கண்களை நன்கு பாதுகாத்தல் அவசியம். தாராளமான பண வரவு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

இன்றைய ராசிபலன் 16/2/2020: தின ராசிபலன்கள்: – Horoscope Tamil. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

மற்றவர்கள் படித்து பயன்பெற இதை சேர் செய்யவும்.

Previous articleகரக் மொறுக் சாப்பிடும் சத்தம்: ஏன் சிலரை கோபப்படுத்துகிறது
Next article20 years of Hey Ram: ஹே ராம் பற்றிய ஒரு பார்வை 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here