Home அரசியல் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு உயர்வு – இளைஞர்கள் கடும் அதிருப்தி

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு உயர்வு – இளைஞர்கள் கடும் அதிருப்தி

393
0

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு உயர்வு – இளைஞர்கள் கடும் அதிருப்தி

உலகமே கொரோன வைரஸை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் வேளையில்  தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டு அதற்க்கான அரசாணை வெளியிடப்பட்டது .

இளைஞர்கள் கடும் அதிருப்தி:

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் மூலம் அரசு வேலைக்காக தயாராகி வரும் தமிழக இளையர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் .

வரலாறு காணாத முறைகேடு:

ஏற்க்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வரலாறு காணாத வகையில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டதில் இருந்து இளையர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை குறைத்து  மன குமுறலில் இருந்தவர்களுக்கு அரசின் நேற்றைய அறிவிப்பு தலையில் இடி விழுந்தது போல் அமைந்துள்ளதாக  அரசியல் நிபுணர்கள் குற்றம் சாட்டு வைத்துள்ளனர் .

அரசின் சமயோசித செயல்:

இது ஒருபுறம் இருந்தாலும் எதற்காக இந்த அவசர முடிவு என்று பார்க்கும் போது  அரசின் சமயோசித செயல் வெளிப்படுகிறது .

அரசின் வரி வருவாய்:

ஆம் , கொரோன வைரஸ் நோய் தொற்றின் அச்சம் காரணமாக கடந்த ஒன்றரை மாதம் முழு முடக்கத்தில் இருப்பதால் அரசின் வரி வருவாய் உள்பட பல்வேறு இன வருவாயும் குறைந்துள்ளதால் இந்த வருடம் ஓய்வு பெறுவர்களுக்கு உண்டான பண பலன்களை கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதன் மூலம் ஒருவருடம் எந்த தேவையும் ஏற்படாது  என்பதே முழு முதற் காரணம் என்று கூறப்படுகிறது

கொரோன கால அவசர பணி:

அது மட்டுமின்றி கொரோன கால அவசர பணிகளில் பல்வேறு துறை பணியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல்  பணி செய்து வருவதாலும் அரசு இத்தகைய  முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

5100 கோடி சேமிப்பு:

புள்ளிவிவரமாக பார்த்தோமானால் தமிழக அரசில் இந்தாண்டு ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25000  முதல் 30000  இருக்க கூடும் என்று கணிக்கபட்டுள்ளது எனில் அவர்களுக்கு ஓய்வுவூதிய தொகை சுமார் 5100 கோடியாக இருக்குமாம்.இந்த பணத்தை அரசு இந்த ஆண்டு சேமித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

சட்டசபை தேர்தல்:

அது மட்டுமின்றி சட்ட சபை தேர்தலும் நெருக்கத்தில் இருப்பதால் முதலமைச்சர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் அரசின் இந்த முடிவினால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்வி குறியாகாமல் இருந்தால் சரிதானே !

Previous articleஎம்‌எஸ் தோனி; நான் பயப்படுவேன், பதற்றமடைவேங்க நானும் மனுசன் தான்
Next articleதலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் இணைந்த விஜய் சேதுபதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here