Home விளையாட்டு சென்னை வந்தது சிங்கம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை வந்தது சிங்கம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

358
0
சென்னை வந்தது சிங்கம் மகேந்திர சிங் தோனி

சென்னை வந்தது சிங்கம்; ரசிகர்கள் கொண்டாட்டம். மகேந்திர சிங் தோனி சென்னை வந்த விமான நிலைய வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டு உள்ளனர்.

சென்னை வந்தது சிங்கம்

13-வது ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 29-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று மார்ச் 2-ஆம் தேதி பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார்.

பைக்கில் பின்தொடர்ந்த ரசிகர்கள்

இவர் வருவதை அறிந்த ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் பயங்கர வரவேற்பு அளித்தனர். தோனி தங்கும் ஹோட்டல் வரை ரசிகர்கள் பைக்கில் ‘தோனி, தோனி’ என்று கத்தியவாறு பின்தொடர்ந்து சென்றனர்.

2019-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்த ஐபிஎல்லில் 8 மாதங்கள் கழித்து தோனி களம் இறங்க உள்ளார்.

இவருடன் சுரேஷ் ரெய்னாவும் இன்று பயிற்சியில் ஈடுபட சென்னை வந்தடைந்தார். தோனி விமான நிலையத்தில் இருந்து வந்த சில காட்சிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 0.59 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இதை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். என்ன இருந்தாலும் நம்ம தல தோனி பேட்டிங்கை தொலைக்காட்சியில் நேரடியாக ஆடி பார்த்து ரொம்ப நாளாச்சு.

தடைகள் தாண்டி சாம்பியன்

இந்த ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். 2 ஆண்டுகள் தடை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டு வந்து 2018-ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் கடைசி பந்தில் ஒரு ரன்னில் தோற்றுப்போனது சென்னை அணி.

அகில இந்திய ரசிகர் பட்டாளம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் அதிக ரசிகர் கொண்ட அணியாக விளங்க காரணம் தல தோனி.

தோனி மஞ்சள் நிற டி-சார்ட் போட்ட போதும், எல்லோ (yellow) ஆர்மி ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கி விடுவார்கள்

சில ஆண்டுகளாகவே தோனியின் பேட்டிங்கில் முன்புபோல் ஆக்ரோஷம் இல்லை என பலர் விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஐபிஎல் அமையும் என்பது சந்தேகமே இல்லை.

தோனி சென்னையில் சில நாட்கள் மட்டும் பயிற்சி மேற்கொள்வார். 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 29-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது.

முதல் போட்டியே பரம எதிரியான மும்பை உடன் மோதுவதால் ரசிகர்களுக்கு போட்டி விருந்தாக அமையும். நம்ம தல தோனிக்கு விசில் போடு

Previous articleஇன்றைய ராசி பலன்கள் – 03/03/2020 – horoscope tamil
Next articleமீண்டும் கொரோனா; இந்தியாவில் வெறியாட்டம் தொடருமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here