மீண்டும் கொரோனா வைரஸ் (corona virus) இந்தியாவிற்குள் நுழைந்தது. மூன்று பேரை பாதித்துள்ளது. இந்தியாவிலும் கொரானா வைரஸின் வெறியாட்டம் தொடருமா?
கேராளாவில் கொரோனா
சில மதங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சில நாட்களிலேயே கொரோனா வைரஸ் தொடரில் இருந்து அவர்கள் பூரண குணமடைந்துவிட்டதாக பின்னர் தகவல்கள் வெளியானது.
மீண்டும் கொரோனா
இத்தாலியில் இருந்து டெல்லி வந்த பயணி ஒருவருக்கும், ராஜஸ்தான் வந்த இன்னொருவருக்கும், துபாயில் இருந்து தெலுங்கான வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.
இந்திய அரசு கொரோனாவை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் தடுக்க விழிப்புடன் செயல்பட்டாலும் கோரோனா சத்தம் இல்லாமல் இந்தியாவிற்குள் வந்துவிட்டது.
பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அலட்சியமாக இருக்காமல் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது போன்று உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.