Home சினிமா கோலிவுட் Master Shooting Wrap: இனி வசந்த காலம்: சாந்தனு டுவீட்!

Master Shooting Wrap: இனி வசந்த காலம்: சாந்தனு டுவீட்!

645
1
Master Shooting Wrapped சாந்தனு டுவீட்

Master Shooting Wrap: மாஸ்டர் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. படக்குழுவினருடன் செல்ஃபி எடுத்து இனி வரும் காலம் வசந்த காலம் என்று சாந்தனு டுவீட் செய்துள்ளார்.

Master Shooting Wrap

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, நாசர், ஸ்ரீமன், ரமேஷ் திலக், சுனில் ரெட்டி, ரம்யா சுப்பிரமணியன், பிரேம், கௌரி கிஷான், பிரிகிதா ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

129 நாட்கள் மாஸ்டர் படப்பிடிப்பு

வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 129 நாட்கள் இடைவேளையே இல்லாமல் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

சாந்தனு டுவீட்

இதையடுத்து, படக்குழுவினர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து நடிகர் சாந்தனு கூறுகையில், இந்த அழகான தருணத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.

இந்த வாய்ப்பு கொடுத்த விஜய் அண்ணா, சேவியர் பிரிட்டோ சார், லலித்குமார் சார், ஜெகதீஷ் டார்லிங் ஆகியோருக்கும் நன்றி.

இனி வரும் காலம் வசந்த காலம். விரைவில் வருகிறோம் மக்களே என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி முத்தம்

மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு பெறுவதற்கு முன்னதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, விஜய்க்கு கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது விஜய் சேதுபதி கொடுத்த 1,35,263 ஆவது முத்தம் என்று கூறப்படுகிறது.

கல்லூரி மாணவியா?

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாகவும் நடித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது.

அண்மையில் கூட மாளவிகா மோகனன் கல்லூரிக்கு வருவது போன்ற புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி ஸ்டோரி

சமீபத்தில் இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது.

எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் கேட்டுக்கொண்டிருக்கிறது. விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடர்ந்து குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் விஜய்க்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

2ஆவது சிங்கிள் டிராக்

இதற்கிடையில், குட்டி ஸ்டோரி சிங்கிள் டிராக்கை தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் டிராக் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அண்மையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அப்படியே நெருப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கேட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்துள்ளனர்.

விஜய் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

வரும் மார்ச் முதல் வாரத்தில் அதுவும் 5 ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று விஜய்யும் தனது 65 ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleமீண்டும் கொரோனா; இந்தியாவில் வெறியாட்டம் தொடருமா?
Next articleநிர்பயா குற்றவாளிகள்: தூக்கிலிட முடியாது – நீதிமன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here