Home ஆன்மிகம் ரிஷிகள்: வெற்றியினை வழங்கும் விஜயாபதி விஸ்வாமித்ர க்ஷேத்திரம்!!

ரிஷிகள்: வெற்றியினை வழங்கும் விஜயாபதி விஸ்வாமித்ர க்ஷேத்திரம்!!

406
0

ரிஷிகள்: வெற்றியை பெற்று தரும்  விஸ்வாமித்ர மகரிஷி ஆலயம். இராம இலட்சுமணருடன் விஸ்வாமித்ர மகரிஷி யாகம் செய்த தலம். சூட்சும ரூபத்தில் விஸ்வாமித்ர மகரிஷி தவம் புரியும் விஜயாபதி.

சப்த ரிஷிகளில் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற சத்திரிய குலத்தில் பிறந்த ஒரே ரிஷி விஸ்வாமித்ர மகரிஷி ஆவார்.

விஸ்வாமித்ர மகரிஷி இராம இலட்சுமணரின் காவலுடன் யாகம் செய்து தம் சக்திகளை திரும்ப பெற்று தாடகை வதத்தால் இராம இலட்சுமணருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலமே விஜயாபதி ஆகும்.

தமிழகத்தில் விஸ்வாமித்ர க்ஷேத்திரம்

கௌசிகன் என்ற அரசனாக பிறந்து. நாட்டை துறந்து உலக மக்கள் நலனுக்காக தவமியற்றி பல சக்திகளை பெற்று விஸ்வாமித்ரர் என்ற திருநாமம் கொண்டார்.

விஸ்வம்+மித்ரன் = விஸ்வாமித்ரன் என்றால் அகில உலகதிற்கும் நண்பன் என்று பொருள்படும்.

தன்னலம் இல்லாமல் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தாம் பெற்ற சக்திகளை தன்னை நாடி வரும் மக்களுக்கு வாரி வழங்கிய மகரிஷியே விஸ்வாமித்ரர் ஆவார்.

மந்திரங்களில் உயர்ந்த மந்திரமான காயத்ரி மந்திரத்தை உலகிற்கு அளித்த மகான் விஸ்வாமித்ரரே ஆவார்.

தாம் இழந்த தவ வலிமையை மீட்க விஜயாபதியில் சிறப்பு யாகம் செய்தார். யாகதிற்கு தடை ஏற்படுத்த தாடகை என்ற அரக்கி இருந்த இடம் ஆதலால், தாடகையை வதைக்க இராம இலட்சுமணருடன் யாகம் செய்ய சென்றார்.

தாடகையை இராம இலட்சுமணர் வதைத்து விட்டனர். இதனால் இராம இலட்சுமணருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை நீக்க விஜயாபதியில் சிறப்பான யாகம் நடத்தினார்.

தில்லை வனமாக இருந்த இந்த இடத்தில் தில்லை காளியை காவலுக்காக பிரதிட்டை செய்தனர். பின் சிறப்பு யாகத்தை நடத்தி அதில் வெற்றி பெற்றார் மகரிஷி.

மகாலிங்க மூர்த்தியும் அன்னை அகிலாண்டேஸ்வரியும் தோன்றி விஸ்வாமித்ரர் இழந்த தவ பலனையும், பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்கினார்.

விஜயம்+பதி = விஜயாபதி. விஜயம் என்றால் வெற்றி, பதி என்றால் இடம். விஸ்வாமித்ரருக்கு தவத்தில் வெற்றியை வழங்கிய இடம் ஆதலால் விஜயாபதி எனப் பெயர்ப் பெற்றது.

விஜயாபதி ஆலய அமைப்பு

விஜயாபதி கடற்கரையில் அமைந்த ஊர் ஆகும். ஊர் எல்லையில் இலங்கையை பார்த்தவாரு தில்லை காளி சன்னதி அமைந்துள்ளது.

மகாலிங்க சுவாமி மற்றும் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உள்ளது. மகாலிங்க சுவாமியை பார்த்த வாரு தனி கோவிலில் விஸ்வாமித்ர மகரிஷி தவ கோலத்தில் காட்சி தருகிறார்.

யாக குண்ட விநாயகர் தனி சன்னதியில் காட்சி தருகிறார். தல விருட்சமாக தில்லை மரம் விளங்குகிறது.

ஒவ்வொரு மாதம் அனுஷ நட்சத்திர தினமும், பௌர்ணமி மற்றும் அமாவாசை திதியிலும் விஸ்வாமித்ர மகரிஷிக்கு சிறப்பு யாகம் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

விஸ்வாமித்ரர் யாகம் செய்த பெரிய யாக குண்டமும் இங்கே அமையப் பெற்றுள்ளது. விஸ்வாமித்ரரும் இராம இலட்சுமணரும் நீராடிய விஸ்வாமித்ர தீர்த்த கட்டம் அமைந்துள்ளது.

இன்றளவும் விஸ்வாமித்ர மகரிஷி சூட்சும வடிவில் இங்கே இருந்து வருவதாக மக்கள் நம்புகின்றனர். சாநித்யம் நிறைந்த அற்புதமான ஆலயம்.

வெற்றியை தரும் விஜயாபதி

வாழ்வில் தோல்வியை சந்தித்தவர்கள், தொழிலில் முடக்கம் ஏற்பட்டவர்கள், பித்ரு தோஷம் உள்ளவர்கள். இங்கே வந்து பித்ரு தர்பணம் செய்ய தோஷம் நீங்கும்.

குடும்பத்தில் பிறந்த கன்னி பெண்களால் சாபம் உள்ளவர்கள் ஒரு முறை இத்தலத்திற்கு சென்று வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

பித்ரு தர்பணம் செய்ய உகந்த இடமாக இந்த விஜயாபதி விளங்குகிறது. இங்கே விஸ்வாமித்ர கட்டத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதல் அனைத்து நவ கிரக தோஷங்களும் நீங்கும். சிறந்த நவ கிரக பரிகார தலமாகும்.

பலா மற்றும் அதிபலா மந்திரத்தை விஸ்வாமித்ரர் இராமனுக்கு உபதேசித்த இடம் இதுவே ஆகும். குரு தீட்சை பெறுபவர்கள் இங்கே வந்து நவ கலச யாகம் செய்து. கடலில் நீராடி தோஷங்களை போக்கிக் கொண்டு தீட்சை பெறலாம்.

இங்கே நடத்தப்படும் நவ கலச யாகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பல்வேறு பிரபலங்கள் இங்கே வந்து நவ கலச பூஜை செய்து வெற்றியை பெற்றுள்ளனர் என்று கூறுகின்றர்.

மக்கள் குறைகளை கேட்டு அவர்களின் கஷ்டத்தை உடனே போக்கும் தாராள மனப்பான்மை கொண்ட ஒரே ரிஷி பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் மட்டுமே ஆவார்.

அனைவரும் விஜயாபதி சென்று பிரம்மரிஷி விஸ்வாமித்ர மகரிஷியை வணங்கி வாழ்வில் வெற்றிகளை பெற்று நற்கதி அடைவோம்.

அமைவிடம்: திருச்செந்தூர் to கன்னியாகுமரி சாலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ளது விஜயாபதி.

நடைதிறப்பு: காலை 7 முதல் 12 வரை மற்றும் மாலை 4 முதல் 8 மணி வரை.

Previous articleரிலையன்ஸ் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி உலகத்தின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம்: மும்பை
Next articleசென்னையில் இருந்து கோவை வந்த 30 ஊழியர்களை பரிசோதனையின்றி பணியில் சேர்த்ததால் ஜுவல்லரிக்கு சீல்: கோவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here