Home Latest News Tamil பூமியைப் படைத்தவர் யார் தெரியுமா?

பூமியைப் படைத்தவர் யார் தெரியுமா?

1120
0
பூமியைப் படைத்தவர்

பூமியைப் படைத்தவர் யார் தெரியுமா?

பூமியின் மிகப்பரந்த நிலப்பரப்பில், பல்வேறு நாடுகளில் பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

நமக்கு, பூமி மிகப்பெரிய பரப்பளவு. ஆனால், அண்டவெளியில் இருந்து பூமியைப்பார்த்தல் எறும்பைவிட பலமடங்கு சிறியதாக மாறிவிடும்.

இப்படிப்பட்ட பூமியைப் படைத்தது யார்? ஓவ்வொரு மதமும், ஒரு கடவுள் பெயரைச் சொல்லி பூமியைப் படைத்தவர் எனக் கூறுகின்றது.

எனவே அதற்குள் நாம் சொல்லவேண்டாம். அறிவியலின்படி பூமி எப்படி உருவானது எனப்பார்க்கலாம்.

தனிமங்களும் உயிர்களும்:

ஒரு மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜன், நைட்ரஜன், எலும்பிற்க்கு தேவையான கால்சியம், ரத்ததிற்க்கு தேவையான இரும்புச்சத்து ஆகியவை அவசியம்.

கூடவே கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற தனிமங்களும்; உப்பில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற தனிமங்களும் தேவை.

இத்தனிமங்களின்றி ஒரு திடமான, முழுமையான மனிதன் உருவாகமுடியாது. மேலும் தங்கம், வெள்ளி மற்றும் அலுமினியம் போன்ற பல்வேறு தனிமங்களும் நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளன.

பீரியாடிக் அட்டவணை (Periodic Table):

மேலே உள்ள அனைத்து தனிமங்களையும், வரிசைப்படுத்தி உருவாக்கப்பட்டதே பீரியாடிக் அட்டவணை.

பீரியாடிக் தனிமங்களின் குணங்களை ஆராய்ந்து, இவைதான் மனிதன் வாழ இனிதே உதவுகின்றன எனக் கண்டறியப்பட்டது.

இத்தனிமங்கள் பூமிக்கு எப்படி வந்தன? என்று ஆராய்ந்தபோதே சில உண்மைகள் புலப்பட்டது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் பட்டுள்ளது.

உலகம் உருவான வரலாறு:

சுமார், 1370 கோடி வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. அப்போதைய பால்வெளி அண்டம் ஒரு பலூனைப்போல் விரிவடைந்து காணப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஹைட்ரஜன் 75 சதவீதமும், ஹீலியம் 25 சதவீதமும் மட்டுமே இருந்துள்ளது. இப்போதிருந்த எந்தக்கோள்களும், நட்சத்திரங்களும் அப்பொழுது தோன்றவில்லை.

நட்சத்திரம் தோன்றியது எப்படி?

ஹைட்ரஜனும் ஹீலியமும் இணைந்தே நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது. ஒருநாளே ஒருவருடமோ அல்ல, பல கோடிக்கணக்கான வருடங்களாக ஏற்பட்ட மாற்றம்.

ஹைட்ரஜனின் ஈர்ப்பு விசை:

ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்பு விசையினால், ஒன்றுடன் ஒன்று கலந்து முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவானது. இதுவே இந்த உலகின் மூதாதையர் கூட்டம்.

பலமடங்கு வெப்பத்தைக்கொண்ட இதில் ஹைட்ரஜன், ஹீலியம் இணையும்போது தோன்றிய ஆற்றலே ஒளி.

இவ்வாறு தொடர்ச்சியாக அணுச்சேர்க்கைகள் நடந்துள்ளது. இரண்டு ஹீலியம் இணைந்து ஒரு பெரிலியம் உருவாகியுள்ளது.

பெரிலியம் உடன் ஹீலியம் சேர்ந்து கார்பன் அணு உருவாகியுள்ளது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிர்மூச்சான ஆக்ஸிஜனை உருவாக்கியுள்ளன.

இரண்டு கார்பன் இணைந்து ஒரு மெக்னீசியம் அணு உருவாகியுள்ளது. இப்படி பல்வேறு அணுச்சேர்க்கைகள் நடந்து பல தனிமங்கள் படிப்படியாக உருவாகியுள்ளன.

சூப்பர் நோவா (super nova):

ஓவ்வொரு நட்சத்திரங்களும், அதன் ஆயுட்காலம் முடிந்ததும் வெடித்துச் சிதறும். இதற்கு பெயரே சூப்பர்நோவா. சூப்பர்நோவாவை கண்களால் பார்த்தால், அவ்வளவு ரம்யமாக இருக்குமாம்.

முதன்முதலில் தோன்றிய மூதாதையர் நட்சத்திரங்கள், தன்னுடைய ஆயுட்காலம் முடிந்தபின் வெடித்துச் சிதறுகின்றது.

அப்பொழுது, அதிலிருந்த அனைத்துத் தனிமங்களும், ஒரு வாயுக்கூட்டம்போல் பரவி ஹைட்ரஜன் வாய்வுடன் கலந்துள்ளது.

இந்த சூப்பர்நோவா நிகழ்வின்போதே, யுரேனியம், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற தனிமங்கள் உருவாகியனவாம்.

இப்படி பறந்து கிடக்கும் வாயுக்கூட்டத்திற்க்கு நெபுல்லா என்று பெயர்.

சூரியன் மற்றும் கோள்கள் உருவானது எப்படி?

ஹைட்ரஜன் தன்னுடைய ஈர்ப்பு விசையால், அதனுடைய அணுக்களை ஒவ்வொன்றாக இணைத்துப் புதிய நட்சத்திரத்தை உருவாக்கும்.

அப்படி உருவானதே சூரியன். சூரியனைச் சுற்றி தூசுகளும் பறைகளுமே முதலில் உருவாகியுள்ளன.

அந்தப் பாறைகள், சூரியனின் ஈர்ப்பு விசையால் அதைச்சுற்றி வரும்போது, ஒன்றுடன் ஒன்று பிணைந்து, மோதி “கோள்களாக” மாறியுள்ளன.

இப்பொழுதும் இந்தப் பாறை இணைப்பு நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. விண்கற்கள் எறிகல்லாக மாறி பூமியில் விழும் நிகழ்வே அது.

பல்லாயிரம் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, பிணைந்தால் எப்படி இருக்கும்? என கற்பனை செய்துபாருங்கள். அப்படி உருவானதே நம் பூமி.

Previous articleபபுக் புயல்: பெயருக்கேற்ற புயலின் சேட்டை!
Next articleசூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன்: சந்திர கிரகணம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here