Home நிகழ்வுகள் தமிழகம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ? உயர்நீதிமன்றத்தில் விசாரணை

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ? உயர்நீதிமன்றத்தில் விசாரணை

495
0

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ? உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தமிழகத்தில் கொரோன காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1  தேதி முதல் 12  தேதி வரை நடைபெறும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது .

கொரோன தொற்று:

கொரோன தொற்று அதிகரித்துவரும் வேளையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு அவசரம் என்ன என்று பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர் .

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்:

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் ராஜா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார் .

அந்த மனுவில் அவர்  தமிழக்தில் இதுவரை 8178  கொரோன வைரஸ் காரணமாகி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 61  பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்

மேலும் இந்த எண்ணிக்கை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்

ரத்து செய்ய கோரிக்கை:

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால் மாணவர்கள் மத்தியில் நோய் தொற்று பரவ கூடும் என்பதால் அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார் .

குறித்த  வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .

Previous articleகொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO
Next articleடிசம்பரில் ராணா டகுபதி திருமணம்: மகிழ்ச்சி கடலில் மொத்த குடும்பம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here