ஏர்டெல் வோடஃபோன் இலவச சேவை யார் யாருக்கெல்லாம் தெரியுமா? ஊரடங்கு முடியும் வரை ஏர்டெல் வோடஃபோன் இலவச சேவை வழங்க முடிவு.
உலகம் முழுவதும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் அனைவரும் ஊரடங்கில் இருந்து சமூக விலகலை கடைபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டெலிகாம் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தொலைத் தொடர்பு சேவை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை ப்ரீபெய்டு செல்லிடப்பேசி சேவையை வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்தது.
ஏப்ரல் 17ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் வசதி இலவசம் என்றும் ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.