Home சினிமா கோலிவுட் 18 மணி நேரம் சண்டை செஞ்ச விக்ரம்: இயக்குநர் பாராட்டு!

18 மணி நேரம் சண்டை செஞ்ச விக்ரம்: இயக்குநர் பாராட்டு!

283
0
Chiyaan Vikram Action Scene

Vikram; 18 மணி நேரம் சண்டை செஞ்ச விக்ரம்: இயக்குநர் பாராட்டு! கோப்ரா படத்திற்காக சியான் விக்ரம் கிட்டத்தட்ட 18 மணிநேரம் சண்டைக் காட்சியில் நடித்ததாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

கோப்ரா படத்திற்காக விக்ரம் தொடர்ந்து 18 மணி நேரம் சண்டைக் காட்சியில் நடித்தார் என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. தற்போது சியான் விக்ரமை வைத்து கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய கோப்ரா படத்தில் விக்ரமுக்கு 10க்கும் மேற்பட்ட அவதாரங்கள் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது.

கொரோனா காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட படக்குழுவினர் இந்தியா திரும்பினர்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு எஞ்சியுள்ள படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சியான் விக்ரம் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில், ஏன் விக்ரமை அனைவருமே நேசிக்கிறார்கள் என்பது குறித்து பிரபலங்கள் பேசிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதையடுத்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து விக்ரம் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தப் படத்திற்காக தொடர்ந்து 18 மணி நேரம் சண்டைக் காட்சியில் நடித்தார். தொடர்ந்து மேலும், பல காட்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியதும், சற்றும் முகம் சுளிக்காமல் ஓகே சொன்னார் என்று அவர் மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here