Home சினிமா கோலிவுட் Best Tamil Movies 2020 | சிறந்த படங்கள் 2020

Best Tamil Movies 2020 | சிறந்த படங்கள் 2020

3
545
Best Tamil Movies சிறந்த படங்கள் Must watched tamil movies in 2020

Best Tamil Movies 2020 – சிறந்த படங்கள் 2020 இது டாப் 10 மூவி (Top 10 Tamil Movies 2020) லிஸ்ட் அல்ல. Must watched tamil movies in 2020.

2020-ல் மிகக் குறைந்த அளவிலான படங்கள் மட்டுமே வெளிவந்தது. அதில் நாங்கள் பார்த்த படங்களில் சிறந்த படங்களை இங்கே பட்டியல் செய்து உள்ளோம்.

இவை வசூல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. புதிய முயற்சி, புதிய கதை, திரைக்கதை, விறுவிறுப்பு போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார் செய்து உள்ளோம்.

இது டாப் 10 மூவி (Top 10 Tamil Movies 2020) லிஸ்ட் அல்ல. ரிலீஸ் தேதி வாரியாக வரிசைப்படுத்தியுள்ளோம். இந்தப் படங்கள் எல்லாம் பார்க்க வேண்டிய படங்கள். 

திரையரங்கில் மட்டும் அல்லாமல் இந்த முறை ஓடிடி தளங்களிலும் அநேக படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சிறந்த படத்தையும் இதில் இணைத்து உள்ளோம்.

சைக்கோ – Psycho

மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் சைக்கோ. வில்லன் ராஜ்குமார் பிச்சமணியை முன்னிலைப்படுத்தி தான் சைக்கோ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற உதயநிதி எப்படி சைக்கோவிடம் இருந்து காதலியைக் காப்பாற்றுகிறான் என்பதே கதை. படத்தில் உதயநிதி எப்போதும் கண்ணாடி தான் அணிவாரா? என இந்தப் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும், படம் ரசிக்கும் படியாகவே விறுவிறுப்பாக செல்லும். அதேவேளை இது மற்ற மிஸ்கின் படங்களை விட சுமார் தான்.

வானம் கொட்டட்டும்  – Vaanam Kottatum

சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், தனசேகரன் இயக்கத்தில், மணிரத்னம் தயாரிப்பில் வெளிவந்த படம்.

மணிரத்னம் தயாரிப்பு என்றாலும், படம் அவரின் டெம்ளேட் வரையறைக்குள் எடுக்கப்பட்டு இருந்தது. இந்தப் படம் ஒரு அவரேஜ் மூவி தான். சரத்குமார்-ராதிகா இருவருக்கும் ஒரு நல்ல கம்பேக் மூவி.

பாரம் – Baaram

இயக்குனர் ப்ரியா கிருஷ்ண சுவாமி, ஒரு எதார்த்தமான வாழ்க்கை அவலத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்துள்ள படம் பாரம்.

பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என வெளியூர் சென்றாலும் விதியை மாற்ற முடியவில்லை. கால் உடைந்து மகன் வீட்டிற்கே வந்து பாரமாக மாறுகிறார் தந்தை.

மகனுக்கு கவுரவக் குறைச்சல் வந்து விடும் என தந்தையை அத்தை வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறான். அதேவேளை வைத்தியம் செய்ய கையில் பணம் இல்லை.

இதனால் தந்தையை ‘தலைக்கூத்தல்’ முறைப்படி கொலை செய்து விடுகிறான். இதை அறிந்த அத்தை மகன் தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சி செய்கிறான்.

ஊரே அம்மணமாக இருக்கும்போது நாம் மட்டும் ஆடை அணிந்தால் பைத்தியம் என்பார்கள் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை.

இந்த எதார்த்த உண்மை வாழ்க்கையை, நம் கண்முன் கொண்டு வந்துள்ளார் பிரியா கிருஷ்ண சுவாமி.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – Kannum Kannum Kollaiyadithaal


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – திரைவிமர்சனம்

2020-ன் பக்கா சஸ்பென்ஸ் ட்விஸ்டர் எண்டர்டெயின்மென்ட் மூவி. இந்த படத்தின் பலமே யாரும் எதிர்பாராத நேரத்தில் நிகழும் ட்விஸ்ட் தான்.

அந்த ட்விஸ்டுக்கு முன்பு வரை இதெல்லாம் ஒரு படமா எனத் தோன்றும், அந்த ட்விஸ்டுக்கு பிறகு அடடே இதல்லவோ படம் என வியக்கவைத்து விட்டார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

படத்தின் பாடல்கள் இந்த வருடம் முணுமுணுக்காத மார்டன் இளைஞர்களே இருக்க முடியாது. இயக்குனர் கவுதம் மேனனை படத்தின் கிளைமேக்ஸில் காமெடியனாக மாற்றியது உச்சகட்ட சஸ்பென்ஸ்.

ஒரு சஸ்பென்சுக்கு எல்லாம் படம் ஓடுமா எனக் கேட்டால் அதை நிகழ்த்திக்கட்டியுள்ளது KKK. தமிழில் துல்கர் சல்மானுக்கு ஒரு நல்ல கம்பேக் படம். ரக்ஷனுக்கு ஒரு நல்ல மைல் கல். 

செத்தும் ஆயிரம் பொன் – Sethum Aayiram Pon

ஒரு சென்னை மார்டன் பொண்ணு சிகரெட் பழக்கத்துடன் வேண்டா வெறுப்பாக தன் பாட்டி இருக்கும் கிராமத்திற்கு வருகிறாள்.

சிறுவயதில் சென்றவள் மீண்டும் குமாரியான பின்பு வருகிறாள். வந்த பின்பு அவளுக்கு அந்த ஊரும் பாட்டியும் பிடித்துப்போகிறது.

சில நாட்கள் தான் பாட்டி வீட்டில் இருந்தாலும், பிரியா விடையாக மீண்டும் சென்னை செல்கிறாள். அதன்பிறகு பாட்டி இறந்ததை கேள்வி பட்டு மீண்டும் ஊருக்கு வருகிறாள்.

இது ஒரு ஆர்ட் மூவி. ஆர்ட் பிலிம் விரும்பிகளுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்.  இந்தப்படம் நேரடியாக நெட்பிலிக்ஸ்-ல் வெளியிடப்பட்டது.

பொன்மகள் வந்தாள் – Ponmagal Vandhal

“பொன்மகள் வந்தாள்” – ஒரு விமர்சனம்

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் பொன்மகள் வந்தாள் . இந்தப்படமும் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்ட படம்.

சமுதாய அந்தஸ்திற்காக மகன் செய்த குற்றத்தை மறைத்த தந்தையை, மகனால் பாலியல் சீண்டலுக்கு ஆளான சிறுமி ஜோதிகா வளர்த்த பின் ரிவஞ் எடுக்கும் கதையே பொன்மகள் வந்தாள்.

படித்து லாயராக மாறி, குற்றவாளியை சட்டத்தின் கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்கிறாள். படமும் சுவாரஸ்யத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சம் இல்லாமல் செல்லும்.

புத்தம் புது காலை – Putham Pudhu Kaalai

புத்தம்புது காலை ஒரு அந்தாலஜி படம். நேரடியாக அமேசன் பிரைமில் வெளியிடப்பட்டது. இதுவும் வாழ்க்கை எதார்த்தங்களை அடிப்படையாக கொண்ட ஐந்து கதைகளாக வெளிவந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பகுதி கொஞ்ச காமெடி கலந்த ட்விஸ்ட் கதையாக இருக்கும்.

சூரரைப் போற்று – Soorarai Pottru

சூரரைப் போற்று விமர்சனம்

இந்த வருடத்தில் வெளிவந்த மிகப்பெரிய ஸ்டார் படம். கொரோனாவால் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகியது.

படம் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் உந்துதலாக அமையும். இந்தப்படம் கோபிநாத்தின் வாழ்க்கையின் கருவை மையமாக வைத்து செயற்கையாக எழுதப்பட்ட கதை.

படத்தின் ஓவ்வொரு காட்சிகளும் நம்மை ஏதாவது ஒன்று செய்கிறது. அதற்கு முக்கிய பலம் இசை, திரைக்கதை. மாறன் இந்த வருட இளைஞர்களின் கொண்டாட்ட நாயகன்.

இறுதிச்சுற்று அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு பெண் இயக்குனர், ஆண் இயக்குனர்களுக்கு இணையாக (வசூல் ரீதியாகவும்) வெற்றிப்படம் கொடுக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் சுதா கொங்கரா.

அந்தகாரம் – Andhaghaaram

அந்தகாரம் இந்த படம் நேரடியாக நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகிய படம். அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான் நடிப்பில் விக்னராஜன் இயக்கிய படம்.

இது ஒரு ஆவிகள் பற்றிய கதை தான் என்றாலும் சற்று வித்தியாசமான படம். படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். 

பாவ கதைகள் – Paava Kathaigal

பாவ கதைகள் விமர்சனம்

பாவக் கதைகள் நெட்பிலிக்ஸ்-ல் வெளியான அந்தாலஜி படம். நான்கு கதைகள், நான்கு இயக்குனர்களால் இயக்கப்பட்ட படம்.

நான்கு கதைகளும் எதார்த்த வாழ்வியலை மையமாகக் கொண்டு உள்ளது. சஸ்பென்ஸ், விறுவிறுப்பு, ரொமான்ஸ் என கலந்து உருவாக்கப்பட்டு உள்ளது.

ஓவ்வொரு கதையும் குலைநடுங்க வைக்கும் குற்றங்களின் பின்னணிகளை கொண்டு உள்ளது. பாவக் கதைகள் இந்த ஆண்டு ஓடிடியில் வெளிவந்த சிறந்த தமிழ் படம் எனக் கூறலாம்.

ஏகே vs ஏகே – AK vs AK

AK vs AK Movie Review Tamil – ஏகே vs ஏகே விமர்சனம்

அனுராக் காஷ்யப் vs அனில் கபூர் இந்தப்படம் நேரடியாக நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகியுள்ளது. இது வழக்கமான சினிமா படம் அல்ல.

லைவ் ஆக்ஷன் திரைப்படம். நேரடியாக நடிக்கும்போதே லைவ்வாக எடுக்கப்பட்ட படம். படத்தில் சில இடங்களில் மட்டுமே கட் செய்யப்பட்டு இருக்கும்.

மேலும் இதில் உள்ள கதாப்பாத்திரம் அனைத்தும் ரியலாகவே தோன்றியுள்ளனர். அனுராக், அனில் கபூர் மகளை கடத்தி வைத்துக் கொண்டு ஒரு இரவில் கண்டுபிடிக்க வேண்டும் என அனில் கபூருக்கு கட்டளை இடுகிறார்.

இதுதான் இந்தப்படத்தின் சிறப்பே. படம் ஹிந்தி, தமிழ் என நான்கு மொழிகளில் வெளிவந்துள்ளது. டேக்கன் படம் பார்த்தவர்களுக்கு இந்தக் கதை ஒன்றும் புதிதல்ல.

ஆனால் அதை ரியாலாக செய்வது போன்று திரைக்கதை அமைத்த விதம் புதுமை. இந்தப்படம் பார்பவர்களுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும்.

நாங்கள் பார்த்தவரை சிறந்த படங்கள் 2020 (Best Tamil Movies 2020) பட்டியல் இட்டு உள்ளோம். இதில் ஏதேனும் படங்கள் விடுபட்டு இருந்தால் (Must watched tamil movies) கமெண்டில் பதிவு செய்யவும்.


Notice: Undefined index: items in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-content/plugins/schema-and-structured-data-for-wp/modules/gutenberg/includes/class-gutenberg.php on line 521

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here