கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் 443 மக்கள் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சீனாவில் உருவானதாக சொல்லப்படும் இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் உலுக்கி வருகிறது.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் இந்த வைரஸால்.
நேற்று இரவு இந்திய பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி, மக்களிடம் சுய ஊரடங்கு மற்றும் சமூக விலகலை பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
நேற்று இரவு 12 மணியிலிருந்து, 21 நாட்கள் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
பொருளாதாரத்தை விட எனக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் முக்கியம் என்று மக்கள் அனைவரும் சுய ஊரங்கிற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இந்தியாவில் சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கிறது.
இத்தாலியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு சராசரி 400 பேருக்கு மேல் இறந்து வருகிறார்கள்.
தற்போது ஸ்பெயின் நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 443 பேர் பலியாகியுள்ளனர். இது அந்த நாட்டு மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இறந்து சீனாவை விட இழப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இதனால் அந்த நாட்டு மக்கள் மிகவும் பீதி அடைந்து உள்ளார்கள்.