Vijay Seech; இதெல்லாம் இன்று நடக்கும்: விஜய் மீது அதிக எதிர்பார்ப்பு! தனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை லீலா பேலஸில் நடக்க இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட மாபெரும் படம் மாஸ்டர்.
முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கும் கல்விமுறை ஊழல், நீட் மாணவி அனிதா ஆகியவற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் நெய்வேலி படப்பிடிப்பின் போது விஜய்யை அழைத்து வந்து வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
வீட்டில் ஒன்றுமில்லை என்று தெரிந்து பின்னர் வருமான வரித்துறையினர் சிம்பிளாக சாரி என்று சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு படப்பிடிப்புக்கு சென்ற விஜய்யைப் பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் திரட்டனர்.
படப்பிடிப்பும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, விஜய்யும் சுற்றுலாவிற்காக வெளிநாடு சென்றார். மறுபடியும் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்று தகவல் வந்தது.
அதற்கு, இல்லை இல்லை, கடந்த முறை நடந்த சோதனையின் போது சில அறைகள், லாக்கர்கள் ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனை நீக்குவதற்காகத்தான் சென்றோம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 5 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 7 ஆம் தேதி பாஜக ஆதரவாளர்கள் நெய்வேலி படப்பிடிப்பின் போது போராட்டம் நடத்தினர்.
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியானது. இதில், வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போகும்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விஜய் அந்த குட்டி ஸ்டோரி பாடலை பாடியிருப்பார்.
நேற்று முன் தினம் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் என்று தகவல். இதையடுத்து, வாத்தி ரெய்டு பாடல் வெளியானது.
வெளியான ஒவ்வொரு பாடலுக்கும், விஜய்க்கு நடந்த பிரச்சனையை மையப்படுத்தி, தொடர்புபடுத்தி வந்தது போன்று தெரிகிறது.
ஆதலால், இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் இது குறித்து ஏதேனும் கருத்து தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது.
என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் எல்லோருக்கும் வணக்கம்… இந்த டயலாக் கண்டிப்பாக இருக்கும்
தயாரிப்பாளர், அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, பாடலாசிரியர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்று படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தோ அல்லது தாக்கியோ சில கருத்துக்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், வசனமும் அரசியல் பிரபலங்களிடையே விமர்சனத்தை முன் வைக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் நக்கல், நய்யாண்டி பேச்சு…
கொரோனா வைரஸ் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…..விஜய்யின் ஒவ்வொரு பேச்சையும் கேட்பதற்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அரசியல் தலைவர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பாகவும், கொஞ்சம் மெர்சலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ கொஞ்சம் சேம்பிள் வீடியோ….இதற்கு முன்னதாக விஜய் சர்கார், பிகில் இசை வெளியீட்டில் பேசிய வீடியோக்கள் உங்களுக்காக…..