Delhi Election: 10 மணிக்குள் வாக்களியுங்கள்: பாஜக தொண்டர்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்.
டெல்லியில் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் (Delhi Assembly Election) பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் காலை 10 மணிக்குள் வாக்களிக்குமாறு அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்.
சட்டப்பேரவைத் தேர்தல் விவரம்
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 13,750 வாக்குச்சாவடிகளில் நாளையும் (8ம் தேதி), 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் கடந்த 5 ஆண்டுகளாக தாம் செய்த நல்ல விஷயங்களைக் கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.
மும்முனைப் போட்டி
அதே சமயம் காங்கிரஸ் மற்றும் பாஜகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 2014-க்கு பிறகு காங்கிரஸ் டெல்லியில் ஆட்சியை பிடிக்கவில்லை.
அதேபோல பாஜக 1998-ம் ஆண்டுக்கு பின் இன்றும் டெல்லியில் ஆட்சியை பிடிக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. இதனால் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்பு
பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய மூன்றுக்கும் இடையே பலத்த போட்டி இருந்தாலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் ஆம்ஆத்மி கட்சிதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
அமித்ஷாவின் வேண்டுகோள்
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கையில், டெல்லியில் வாக்குரிமை உலக பாஜகவினர் அனைவரும் காலை 10 மணிக்குள் வாக்களிப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும், இது கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்ததாக கூறியது.
அதேபோல நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வருகை தர வேண்டும்.
அதோடுமட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு முடியும் வரை கண்ணும் கருத்துமாக இருந்து பாஜக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் அமித்ஷா கேட்டுக் கொண்டதாக தெரிவித்தது.