Mappillai; மாப்பிள்ளை வந்து 9 வருசமாச்சு! தனுஷ், ஹன்சிகா நடிப்பில் உருவான மாப்பிள்ளை படம் திரைக்கு வந்து இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மாப்பிள்ளை (Mappillai) படம் திரைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இயக்குந சூரஜ் இயக்கத்தில் தனுஷ், ஹன்சிகா மோத்வானி, மனீஷா கொய்ரா, விவேக் ஆகியோரது நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாப்பிள்ளை (Mappillai).
இதற்கு முன்னதாக ரஜினிகாந்த், அமலா ஆகியோரது நடிப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு மாப்பிள்ளை படம் திரைக்கு வந்தது.
இதே டைட்டிலில், தனுஷ் நடித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் மாப்பிள்ளை. கிட்டத்தட்ட இரு படங்களுமே ஒரு கான்செப்ட்தான்.
ஆனால், எடுக்கப்பட்ட விதம், காட்சியமைப்பு என்று எல்லாமே வேறு வேறு. பொதுவாக குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் மாமியார், மருமகள் சண்டை சச்சரவு இருக்கும்.
ஆனால், மாப்பிள்ளை என்று எடுத்துக் கொண்டால் மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம். அப்படி வந்த படம் தான் மாப்பிள்ளை. ஆனால், காமெடி கலாட்டாவாக திரைக்கு வந்தது.
கிட்டத்தட்ட ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.25 கோடி வசூல் கொடுத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், தெலுங்கு சினிமாவில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மாப்பிள்ளை திரைக்கு வந்து இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் காரணமாக ஹலோ டிரெண்டிங்கில் 9YearsofMappillai என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, இப்படத்தின் ஒரு சில காட்சிகளை பதிவிட்டு தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.